FM Nirmala Sitharaman: "அதானி விவகாரத்தில் விசாரணை குழு அமைக்க தேவையில்லை, ரிசர்வ் வங்கி பார்த்து கொள்ளும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அதானி குழும விவகாரத்தை இந்திய ரிசர்வ் வங்கியே பார்த்து கொள்ளும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார்
அதானி குழுமம் தொடர்பான விவகாரத்தில், இந்திய ரிசர்வ் வங்கி மிகவும் அனுபவம் வாய்ந்தது மற்றும் முழுமையாக அறிந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தார்.
”ஆர்.பி.ஐ - நிதியமைச்சகம் கூட்டம்”
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் சமர்பித்தலுக்கு பிறகு, இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுவுடனான ஆய்வு கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், நிதி துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
FM Smt. @nsitharaman addresses the Central Board of Directors of the @RBI along with Shri @DasShaktikanta in its customary post-Budget meeting in New Delhi. MoS (Finance) Shri @DrBhagwatKarad, Shri @mppchaudhary, and Secretaries of @FinMinIndia are also attending the meeting. pic.twitter.com/BLjY0BS3ys
— Ministry of Finance (@FinMinIndia) February 11, 2023
சமீபத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. அதானி குழும பங்குகளால், அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து, அதானி விவகாரத்தில் தலையிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்தது. அப்போது, இதுபோன்ற தீடீரென பங்குகள் சரிவால், எதிர்காலத்தில் இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவதை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து நிதி அமைச்சகம் மற்றும் சட்டப்பூர்வ சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் உச்சநீதிமன்றம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது.
”ரிசர்வ் வங்கி மிகவும் அனுபவம் வாய்ந்தது”
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியுடனான கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று ஆலோசனையில், அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, அதானி குழும பங்குகள் சரிவு சர்ச்சை தொடர்பாக , ஏதேனும் குழு அமைக்கப்படுமா என செய்தியாளர்கள் நிதி அமைச்சரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு, இந்திய ரிசர்வ் வங்கி மிகவும் அனுபவம் வாய்ந்தது, சிறந்த வல்லுநர்களை கொண்டுள்ளது. எனவே அதை அவர்களிடமே விட்டுவிடுகிறேன்.
புதிய வரி விதிப்பு முறை பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அதில் நிலையான விலக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும் வெவ்வேறு அடுக்குகளுக்கு குறைந்த வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, இதனால் மக்கள் தங்கள் கைகளில் அதிக பணம் இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.