Telangana: மரத்தின்மீது கார் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு - தெலங்கானவில் சோகம்!
Telangana: தெலங்கானவில் மரத்தின்மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
வனபர்த்தி மாவட்டத்தில் அதி வேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஹைதரபாத் - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று அதிக வேகமான சென்றிருக்கிறது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள், கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 12 பேர் கார் ஒன்றில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளனர். திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நேற்றிரவு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கார் ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கொத்தகோட்டா அருகே நள்ளிரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 மாத குழந்தை யசீர், 2 வயது குழந்தை புஸ்ரா, 5 வயது குழந்தை மரியா, 62 வயதான அப்துல் ரஹ்மான், 85 வயதான சலீமா ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆந்திர மாநிலம் கர்னூல் மற்றும் வனப்பர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள்:
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.
2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது