Vaghsheer : ஆறாவது ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் ‘வாக்ஷீர்’ கடல்வழி ஒத்திகையை தொடங்கியது!
Vaghsheer: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீர்’ (Vaghsheer) கடல்வழி ஒத்திகை பயணத்தைத் தொடங்கியதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீர்’ (Vaghsheer) கடல்வழி ஒத்திகை பயணத்தைத் தொடங்கியதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 20, அன்று மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்திலிருந்து இந்த நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான ஒத்திகைகள் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ’வாக்ஷீர்’ நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். இது ‘திட்டம்-75’ -ன் கீழ் 24 மாதங்களில், மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் இந்திய கடற்படையிடம் ஏற்கனவே ஒப்படைத்துள்ளது. இந்நிலையில், ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலின் ஒத்திகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த முயற்சி தற்சார்பு இந்தியாவிற்கு ஊக்கமளிக்கும். ‘வாக்ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பல், கடலில் தீவிர ஒத்திகையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்
பிரான்ஸ் கப்பல் படை மற்றும் டி.சி.என்.எஸ். நிறுவனத்துடன் இணைந்து தாக்குதல் திறன் படைத்த கல்வரி ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ‘இந்திய கப்பல் படை புராஜெக்ட்-75’ என்ற திட்டத்தின் கீழ் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெடுத்தானது. அதற்கான பணிகள் நடைபெற்றன.
இந்தியாவிலேயே ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. இது பிரான்ஸ் தொழில்நுட்ப திறனுடன் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் தற்போது வரை கல்வரி, கந்தேரி, கரன்ஜி, வேலா, வாகீர் ஆகிய 5 நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய கப்பல் படையில் இணைக்கப்பட்டது.
கல்வரி ரக நீர்மூழ்கிக் கப்பல்கள்
கல்வரி ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒவ்வொன்றும் பல்வேறு தாக்குதல் திறன்கள் படைத்தவை. இந்த வகையான கப்பல்கள் நீருக்குள் இருந்தபடியே இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அதோடு பல சிறப்புமிக்க பல தொழில்நுட்பங்களை கொண்டிருப்பது இதன் சிறப்பம்சம். நீரிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்குவது, பல கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்குகளை கண்காணித்தல், உள்ளிட்ட பல பணிகளை இந்த நீர்மூழ்கி கப்பல் செய்யும்.
மேலும் வாசிக்க..