Finance Minister: இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை ; அமெரிக்க டாலர் மதிப்புதான் உயர்ந்துள்ளது - நிர்மலா சீதாராமன்
Finance Minister: "இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே உள்ளது" என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டாலருக்கு மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில், இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே உள்ளது, மேலும் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவான ரூ.82 க்கு மேல் சரிவை கண்டு வருகிறது.
”ரூபாய் மதிப்பு நல்ல நிலையில் உள்ளது”
இந்நிலையில், உலக நிதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த மாநாட்டில் பங்கேற்றபின், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் டாலருக்கு எதிராக இந்தியாவின் ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
Union Finance Minister Smt. @nsitharaman attends the Plenary Meeting of the International Monetary and Financial Committee at the IMF Headquarters @IMFNews, in Washington DC, today. (1/7) pic.twitter.com/qGuNcDkE6U
— Ministry of Finance (@FinMinIndia) October 14, 2022
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர், சர்வதேச சந்தையில், வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்களை விட இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல நிலையிலே உள்ளது. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாக நான் பார்க்கவில்லை, அமெரிக்கா டாலரின் மதிப்பே உயர்ந்து வருவதாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார்.
FM Smt. @nsitharaman shared concerns on key downside risks to the economy owing to slowdown in growth in major economies, cross-border effects due to the ongoing geopolitical situation, rise in commodity prices and tighter financial conditions. (2/7)
— Ministry of Finance (@FinMinIndia) October 14, 2022
”பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படவில்லை”
மேலும் அமலாக்கத்துறை என்பது சுதந்திரமான ஒன்று. அரசியல் மற்றும் பழிவாங்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை செயல்படவில்லை. மத்திய அரசு பழிவாங்கும் நோக்கத்திற்காக அமலாக்கத்துறை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்தார்.
தகுந்த ஆதாரங்களோடு தான் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபடும் எனவும், மேலும் தனிப்பட்ட நபரின் கருத்துகள் குறித்து, நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
The Finance Minister mentioned that World Bank @WorldBank has been a valuable partner of the #G20 since inception and India looks forward to close collaboration with World Bank during upcoming #G20Presidency. (4/6)
— Ministry of Finance (@FinMinIndia) October 15, 2022
மேலும் படிக்க: 75 Digital Banking Units: நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கி கிளைகள்..! அதன் பலன்கள் என்னென்ன தெரியுமா..?