Watch Video: சியாச்சினில் பணியமர்த்தப்பட்ட முதல் மருத்துவ அதிகாரி.. புதிய பெருமையை பெற்ற பாத்திமா வாசிம்! வீடியோ வெளியிட்ட ராணுவம்..
இந்தியாவிலேயே மிக பெரியதும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பனிமலை பகுதியான சியாச்சில் முதல் பெண் மருத்துவ அதிகாரியாக கேப்டன் ஃபாத்திமா வாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிலேயே மிக பெரியதும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பனிமலை பகுதியான சியாச்சில் முதல் பெண் மருத்துவ அதிகாரியாக கேப்டன் ஃபாத்திமா வாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகிலேயே மிக உயரமான போர்க்களம் வட இந்தியாவில் உள்ள சியாச்சின் பனிப்பாறை. இதன் உயரம் 20,062 அடி. கேப்டன் பாத்திமா வாசிம், சியாச்சின் பனிப்பாறையில் செயல்படும் ராணுவ குழுவில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மருத்துவ அதிகாரி என்ற புதிய வரலாறை படைத்துள்ளார். சியாச்சின் போர்ப் பள்ளியில் பயிற்சி பெற்ற பிறகு, 15, 200 அடி உயரத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
15,000 அடி உயரத்தில் கேப்டன் பாத்திமா வாசிம் பணியமர்த்தப்பட்டிருப்பது அவரது அசைக்க முடியாத மனப்பான்மையையும், உயர்ந்த உத்வேகத்தையும் பிரதிபலிக்கிறது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேப்டன் பாத்திமா வாசிமின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
"NATION FIRST"🇮🇳
— @firefurycorps_IA (@firefurycorps) December 11, 2023
Capt Fatima Wasim of #SiachenWarriors creates history by becoming the First Woman Medical Officer to be deployed on an operational post on the Siachen Glacier.
She was inducted to a post at an altitude of 15200 feet after undergoing rigorous training at… pic.twitter.com/u5EovNNu1Y
கடல் எல்லைக்கு மேல் 12,000 அடி உயரத்தில் பர்தாபூர் எனும் இடத்தில் உள்ளது சியாச்சின் அடிப்படை முகாம் (Siachen Base Camp). சாதாரண தினங்களில் மைனஸ் 86 டிகிரி சென்டிகிரேடு (- 86 degree centigrade) என குளிர்நிலை நிலவி வரும் இங்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பனிப்புயல்கள் தாக்குவது வழக்கமான ஒன்று.
அங்கு ஏன் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது..?
சியாச்சின் பனிப்பாறை இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே சுமார் 78 கிமீ தொலைவில் பரவியுள்ளது. அதன் ஒரு பக்கம் பாகிஸ்தான், மறுபக்கம் அக்சாய் சின். 1972 சிம்லா ஒப்பந்தத்தில், சியாச்சின் உயிரற்ற மற்றும் தரிசு என்று விவரிக்கப்பட்டது. ஆனால், அப்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை தீர்மானிக்கப்படவில்லை.
1984 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் இராணுவம் இந்த பகுதியைக் கைப்பற்ற முயற்சிப்பதாக இந்திய இராணுவத்திற்கு தகவல் கிடைத்தது, அதன் பிறகு 13 ஏப்ரல் 1984 ம் ஆண்டு முதல் ராணுவம் ஒரு சிறப்புக் குழுவை உருவாக்கி இந்தப் பகுதியில் நிறுத்தியது.