டெல்லியில் போராட்டத்துக்கு நடுவே ஹோலி கொண்டாடிய விவசாயிகள்!
இத்தனை வருடங்களாக ஹோலி விழாவைக் குடும்பத்தினருடன்தான் கொண்டாடினோம். ஆனால் இன்று நாங்கள் போராட்டக்களத்திலும் குடும்பத்தினர் வீட்டிலும் இருக்கிறார்கள். இருந்தாலும் எங்களது சக விவசாயச் சகோதரர்களுடன் இந்த விழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
டெல்லி காசியாப்பூர் எல்லையில் 123 நாட்களாகப் போராடிவரும் விவசாயிகள் இன்று ஹோலி விழாவைக் கொண்டாடினர். விவசாயச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக மத்திய அரசு தங்களது கோரிக்கைக்குச் செவி சாய்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி காசியாப்பூர் எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் மத்திய அரசும் இந்த விவகாரத்தில் மௌனமாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையே இன்று போராட்டக்களத்துக்கு வந்து சேர்ந்த சில விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ஒன்றிணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணம் பூசியும் ஆடியும் பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
#WATCH | Farmers protesting in Ghazipur at Delhi-Uttar Pradesh border for the last 123 days sing and dance as they celebrate #Holi.
— ANI (@ANI) March 29, 2021
"We demand that the government should accept our demand and take back the three farm laws so that we can go home," says a farmer. pic.twitter.com/6C5RaEUwNv
விழாவில் கலந்துகொண்ட ஒரு விவசாயி கூறுகையில், “இத்தனை வருடங்களாக ஹோலி விழாவைக் குடும்பத்தினருடன்தான் கொண்டாடினோம். ஆனால் இன்று நாங்கள் போராட்டக்களத்திலும் குடும்பத்தினர் வீட்டிலும் இருக்கிறார்கள். இருந்தாலும் எங்களது சக விவசாயச் சகோதரர்களுடன் இந்த விழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசு எங்களது கோரிக்கைகளுக்கு விரைவில் செவிசாய்த்து எங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறோம் ” என்றார்.