உக்ரைனில் இருக்கும் மாணவர்களை மீட்க தமிழக அரசு அமைத்த குழு.. மத்திய அரசின் ரியாக்ஷன் என்ன?
மாணவர்கள் தாயகம் திரும்ப மாநிலத்தில் இருந்து ஒரு குழுவை அனுப்பும் தமிழக அரசின் முடிவு குறித்து வெளியுறவு அமைச்சகம் கருத்து கூறியுள்ளது.
உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்க மாநில அரசு அமைத்த குழு எவ்வளவு உதவியாக இருக்கும் என்று தெரியவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு அமைத்து குழு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ச்சி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்க மாநில அரசின் குழு எந்தளவுக்கு உதவியாக இருக்கும் என்று தெரியவில்லை. அரசாங்கம் வேறு குழு வைத்திருப்பது வசதியாக இருக்குமா என்று தெரியவில்லை. தற்போதைக்கு அதுப்பற்றி கருத்து தெரிவிக்க வேண்டாம்” என்று கூறினார்.
"Do not know how helpful the state government's team will be. I do not know whether the host government will be comfortable having another channel. Lemme not comment on something hypothetical for the moment" : @MEAIndia on TN Government's Team to bring students from #Ukraine. pic.twitter.com/ibXkovPKI2
— 𝐒𝐮𝐜𝐡𝐢𝐭𝐡𝐫𝐚 𝐒𝐞𝐞𝐭𝐡𝐚𝐫𝐚𝐦𝐚𝐧 (@suchisoundlover) March 3, 2022
இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும், சிறப்புக்குழு, மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு தேவையான அனுமதியை வெளியுறவுத்துறை அமைச்சகம் அளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Wrote to Hon'ble @DrSJaishankar requesting him to increase the number of Tamil students to be evacuated from #Ukraine by focussed intervention and sought MEA clearances for the team proposed by GoTN to coordinate with the Indian embassies in Romania, Poland, Hungary and Slovakia. pic.twitter.com/175b3qthcB
— M.K.Stalin (@mkstalin) March 3, 2022
உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பெரும்பாலோனோர் அருகில் உள்ள நாடுகளுக்கு மேலும் பலர் உக்ரைனில் சிக்கியுள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதோடு, உக்ரைனில் இருந்து அழைத்து வரப்படும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஏற்படும் முழு செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்திருந்தார்.
மாணவர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா விமானம் மட்டுமல்லாது, இந்திய ராணுவத்தின் விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகளுக்காக மத்திய அமைச்சர்கள் ஏற்கனவே சென்றுவிட்ட நிலையில், தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பதற்காக சிறப்புக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அயலக அணி செயலாளருமான எம்.எம்.அப்துல்லா, கலாநிதிவீராசாமி, திமுக அயலக அணியின் முன்னாள் செயலாளர் டி.ஆர்.பிராஜா எம்.எல்.ஏ மற்றும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது,.
இந்த சிறப்புக்குழு ஹங்கேரி, ருமேனியா, போலந்து , ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கு இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை அழைத்துவர உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி வரை 193 193 தமிழக மாணவர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில், மேலும் அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணிக்காக இந்த குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.