Watch Video | இது உபி 'புதுப்பேட்டை'! மணமேடை ஏறி மணப்பெண்ணுக்கு குங்குமம் வைத்த கெஸ்ட்! அதிர்ந்த உறவினர்கள்!
புதுப்பேட்டை பட பாணியில் திருமணத்துக்கு வந்தவர் திடீரென மணப்பெண்ணுக்கு பொட்டு வைத்த சம்பவம் உபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Watch Video | இது உபி 'புதுப்பேட்டை'! மணமேடை ஏறி மணப்பெண்ணுக்கு குங்குமம் வைத்த கெஸ்ட்! அதிர்ந்த உறவினர்கள்! Ex-boyfriend puts sindoor in bride's maang in front of groom in Uttar Pradesh's Gorakhpur Watch Video | இது உபி 'புதுப்பேட்டை'! மணமேடை ஏறி மணப்பெண்ணுக்கு குங்குமம் வைத்த கெஸ்ட்! அதிர்ந்த உறவினர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/07/75c8f29ae6cc7ef37e77fc2c1dc153bc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருமண விழாக்கள் என்றாலே கோலாகல கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது. நண்பர்களும், உறவினர்களும் சேர்ந்து களைகட்டும் குடும்ப நிகழ்வாக திருமணம் இருக்கும். ஆனால் அவ்வப்போது சில எதிர்பாராத சம்பவங்கள் திருமண நிகழ்வையே கெடுத்துவிடுவதும் உண்டு. அப்படியான ஒரு சம்பவம்தான் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உபியின் கொராக்பூர் பகுதியில் ஒரு திருமண நிகழ்வு படு விமரிசையாக நடந்துள்ளது. நண்பர்கள், உறவினர்கள் சூழ மணப்பெண்ணும், மண மகனும் மிக திருமணத்துக்கு தயாராக நிற்கின்றனர்.
கேலியும் கிண்டலும் சந்தோஷமாக நிறைந்திருந்த அந்த இடத்தில் படாரென உள்ளே நுழையும் ஒருவர் மணப்பெண்ணுக்கு நெற்றியில் குங்கமிட்டு அதகளப்படுத்துகிறார். அதுவும் மணமகன் சரியாக மணப்பெண்ணுக்கு மாலை மாட்டும் நேரத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பத்தில் விழிக்கும் உறவினர்கள் அந்த நபரை தடுத்து தாக்குகின்றனர். சம்பவத்தின் போது தன் முகத்தை அந்த நபர் துணியால் மூடியுள்ளார். பின்னர் இந்த விவகாரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பரபரப்பு அடங்கியதும், பெற்றோர் நிச்சயித்த மணமகனையே மணமகள் கரம்பிடித்துள்ளார். புதுப்பேட்டை பட பாணியில் திருமணத்துக்கு வந்தவர் திடீரென மணப்பெண்ணுக்கு பொட்டு வைத்த சம்பவம் உபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான தகவலின்படி, திருமண நிகழ்வுக்குள் புகுந்து மணப்பெண்ணுக்கு பொட்டு வைத்த நபர் அப்பெண்ணின் முன்னாள் காதலர் என்று தெரியவந்துள்ளது. வேலை விஷயமாக அவர் வெளியூட் சென்றிருந்த நேரத்தில் காதலிக்கு திருமண ஏற்பாடு நடந்ததாகவும், அதனால் திருமணத்தைக் கெடுக்கவே இப்படி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
In UP's Gorakhpur, a spurned youth gatecrashed an ongoing wedding and applied vermilion to the to-be bride. Families and relatives tried to overpower him resulting in a major ruckus at the venue.@SaumyaShandily3 @anantmsr @vandanaMishraP2 pic.twitter.com/nZPKHl7VVi
— Vivek Pandey | विवेक पांडेय (@VivekPandeygkp) December 7, 2021
.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)