Evening Headlines: தேர்தல் தொடர்பாக விஜய் ஆலோசனை..வைகோவுக்கு கொரோனா தொற்று...இன்றைய டாப் நியூஸ்..!
Evening News Headlines Today, Jan 29: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நடிகர் விஜய் பனையூரில் உள்ள வீட்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்
* ''இது நாகாலாந்து அல்ல; தமிழ்நாடு'' ஆளுநர் ரவியின் நீட் கருத்துக்கு முரசொலி பதில் கருத்து
* அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளார்.
* இ-சேவை மையங்கள் மூலம் 23 சான்றிதழ்களைப் பெறலாம் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
* தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் உட்பட 17 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீட்டில் பேச்சுவார்த்தைக்கு பிறகே இறுதி முடிவு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
* பதவியில் இருந்து விலகாமல் நகர்ப்புறத் தேர்தலில் மனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் - மாநில தேர்தல் ஆணையம்
* மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது
இந்தியா:
* 3 மாதத்துக்கு மேல் கருவுற்றிருந்தால் பணி நியமனம் இல்லை என்ற உத்தரவை எஸ்.பி.ஐ ரத்து செய்தது
* பட்ஜெட் அமர்வில், முதல் இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரம் இல்லை என அறிவிப்பு
* பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியதாக தகவலுக்கு, மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
* டெல்லியில் குடியரசு தின விழாவுக்கு பின் பாசறைக்கு திரும்பிய முப்படை வீரர்கள்
உலகம்:
* 2017ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை இந்திய அரசாங்கம் இஸ்ரேலிடம் இருந்து வாங்கியதாக அமெரிக்கா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
* உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் விளைவுகள் மோசமாகும் - அமெரிக்கா எச்சரிக்கை
விளையாட்டு:
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி சாம்பியன் பட்டம் வென்றார்
* இந்தியாவையும், அதன் மக்களையும் ஏன் இவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா?- வைரலாகும் பிரேட் லீ மற்றும் கேவின் பீட்டர்சனின் பதிவுகள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்