Trisha Net Worth: 40 வயதில் தளபதியுடன் ஐட்டம் டான்ஸ்; அஜித்துக்கு ஜோடி! பல கோடி சம்பளம் வாங்கும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து லேட்டஸ்ட் தகவல் தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
![Trisha Net Worth: 40 வயதில் தளபதியுடன் ஐட்டம் டான்ஸ்; அஜித்துக்கு ஜோடி! பல கோடி சம்பளம் வாங்கும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? Thalapathy vijay and Ajith movie heroine evergreen actress trisha net worth Trisha Net Worth: 40 வயதில் தளபதியுடன் ஐட்டம் டான்ஸ்; அஜித்துக்கு ஜோடி! பல கோடி சம்பளம் வாங்கும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/08/990c94faced6da51e5f4c2ec91d4fa251725765845129313_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
த்ரிஷா அறிமுகம்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 'ஜோடி' படத்தில் 1 நிமிட காட்சியில் வந்து சென்றது தான் இவரின் அறிமுகம். அதுவும் ஹீரோயினாக நடித்த சிம்ரனுக்கு தோழியாக. இதை தொடர்ந்து 2ஆவது படமான 'மௌனம் பேசியதே' படம் தான் த்ரிஷா ஹீரோயினாக அறிமுகமாகிய படம்.
மாஸ் ஹீரோக்களின் ஜோடி:
இதை தொடர்ந்து, சாமி, கில்லி, திருப்பாச்சி படங்கள் கொடுத்த வரவேற்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். அதன் பிறகு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து மாஸ் ஹீரோயினாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் எந்தப் படமும் ஹிட் கொடுக்காத நிலையில் ஹீரோயினுக்கான கதைகளில் நடிக்க துவங்கினார். ஆனால், அந்தப் படங்களும் இவருக்கு பெரிதாக ஒர்க் அவுட்டாகவில்லை.
பொன்னியின் செல்வன் குந்தவை:
இதையடுத்து த்ர்ஷாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் சரிந்தது. 2017ல் ஒரு படங்களில் கூட நடிக்காத த்ரிஷாவிற்கு விஜய் சேதுபதி நடிப்பில் வந்த 96 படம் டர்னிங் பாய்ண்டாக அமைந்தது. ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு தான் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பார்ட் 1 படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவரது அழகு மற்றும் நடிப்புத் திறமை ஆகியவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
அஜித் - விஜய் ஜோடி:
பொன்னியின் செல்வன் 2, லியோ, கோட் ஆகிய படங்களிலும் நடித்தார். இப்போது ஒரு மலையாள படம், விடாமுயற்சி, குட் பேட் அக்லீ, தக் லைஃப், சூர்யா 45 ஆகிய படங்களிலும் ராம் என்ற மலையாள படத்திலும், விஸ்வம்பரா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு த்ரிஷாவிற்கு அதிக படங்களை கொடுக்கும் சூப்பரான ஆண்டாக அமைந்துள்ளது.
த்ரிஷாவின் சொத்து மதிப்பு:
நயன்தாராவிற்கு கூட இப்படி கைவசம் இத்தனை படங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு த்ரிஷா இப்போது அதிக படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஒரு படத்திற்கு ரூ.12 கோடி வரையில் சம்பளம் பெறுகிறார் என கூறப்படுகிறது. இவரது சொத்து மதிப்பு என்று பார்த்தால் ரூ.85 கோடி முதல் ரூ.100 கோடி வரையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சென்னை, மற்றும் ஹைதராபாத்தில் சொந்தமாக ரூ.10 கோடி மற்றும் ரூ.6 கோடி மதிப்பில் சொகுசு பங்களா வைத்திருக்கிறார். ரேஞ்ச் ரோவர் எவாக் (60 லட்சம்), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் (80 லட்சம்), மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் (63 லட்சம்), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (75 லட்சம்) என்று ஏராளமான கார்களை வைத்திருக்கிறார். பிராண்ட் ஒப்பந்தம் மூலமாக வருத்திற்கு ரூ.9 கோடி வரையில் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)