News Wrap: பிரபஞ்ச அழகியாக இந்தியர்...முதல் ஒமிக்ரான் உயிரிழப்பு... பயமுறுத்துவார் கோலி.. இன்றைய டாப் நியூஸ்!!
காலை முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
* தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் ஜனவரி 5-ந் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார்.
* அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை - வானிலை ஆய்வு மையம்
* வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி இடமாற்றம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
* கல்வியறிவில் தமிழகப் பழங்குடியினர் பின்னடைவு: ரவிக்குமார் எம்.பி தெரிவிப்பது என்ன?
* யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை என பொருள் கொள்வது தவறு - பூவுலகின் நண்பர்கள்
* "CBSE வினாத்தாள் தயாரித்தவர் மீது நடவடிக்கை எடுங்கள்" - சு.வெங்கடேசன் எம்.பி !
* மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக 12,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தியா:
* 2001 நாடாளுமன்ற தாக்குதல் முறியடிப்பு தினம்… வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இரங்கல்!
* பெங்களூரில் 152 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று தேவாலய உறுப்பினர்கள் மெட்ரோ திட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
* வாரணாசிக்கு இரண்டு நாட்கள் பயணம் செய்துள்ள பிரதமர் மோடி, காசியில் உள்ள கங்கையில் புனித நீராடி வழிபாடு செய்தார். மேலும், ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைத்தார்.
* எதிர்ப்பலையால் பணிந்த சிபிஎஸ்இ; சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி நீக்கம்
* விருப்பப்பட்டால் அவைக்கு செல்வேன்: ரஞ்சன் கோகாய் சர்ச்சை பேச்சு.. விளைவாக வந்த உரிமை மீறல் நோட்டீஸ்
* முற்போக்கான சமூகத்தில் இத்தகைய வாதங்களுக்கு இடமில்லை - சிபிஎஸ்இ வினாத்தாள் குறித்து சோனியா காந்தி ஆவேசம்
* ‘குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்’ - லெப்.ஜெனரல் அருண் தகவல்
உலகம்:
* பதிவானது முதல் ஒமிக்ரான் தொற்று உயிரிழப்பு. ஒமிக்ரான் தொற்றால் பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
* சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து(21) இந்த ஆண்டுக்கான பிரபஞ்சி அழகி பட்டத்தை கைப்பற்றினார்.
* 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பிய இந்தியா: நன்றி கூறிய தாலிபான்கள்!
விளையாட்டு:
* ரோகித் சர்மா திடீர் காயம்..? - தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு சிக்கல்..!
* இந்திய அணியின் கேப்டன் பொறுப்புகளில் இருந்து விலகிய கோலி டி20, 50 ஓவர்கள் கிரிக்கெட்டில் ஆபத்தான பேட்ஸ்மேனாக மாறுவார் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
* திணறும் தவான்… அன்ஃபிட் ஹர்திக்… கெய்க்வாட், வெங்கடேஷை பிக் செய்யுமா ரோஹித் படை!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்