Manipur Election 2022 Date: மணிப்பூர் தேர்தல் தேதியை திடீரென மாற்றம் செய்த தேர்தல் ஆணையம்! விவரம்!!
மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
அதன்படி மணிப்பூரில் முதற்கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி 28ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 5ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி மற்றும் மார்ச் 3ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. அதைத் தற்போது தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது.
Election Commission revises Assembly poll dates for Manipur
— ANI (@ANI) February 10, 2022
Voting for the first phase of elections to take place on Feb 28 instead of Feb 27
Second phase of voting to happen on March 5 instead of March 3 pic.twitter.com/igACD2GoLo
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான ஆட்சி வரும் மார்ச் 19ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அதற்காக அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்திருந்தது. அதில் முதற்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கும் அடுத்த கட்ட தேர்தலில் 22 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: களம்காணும் சிங்கப்பெண்கள்! ஷாஹின்பாக் முதல் கர்நாடகா வரை... போராட்டங்களும், பெண்களும்!