EPS: ’ப்ளீஸ் ப்ளீஸ்'.. பாஜக கூட்டணி முறிவு கேள்விக்கு கையெடுத்து கும்பிட்ட எடப்பாடி பழனிசாமி!
பாஜகவுடனான கூட்டணியை முறித்தது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Edappadi Palanisamy: பாஜகவுடனான கூட்டணியை முறித்தது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு:
தமிழகத்தில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இதைப்போன்று வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டது. அதாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.
சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியை முறித்தே ஆக வேண்டும். அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.
இதனையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதேபோல 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் பாஜக இல்லாமல் எதிர்கொள்ளும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி:
இந்த பரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயவாடா சென்ற அவர், அங்குள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை தரிசனம் செய்தார்.
இதன்பின், செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்திருக்கிறேன் என்றார். தொடர்ந்து, பாஜகவுடனான கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கையை எடுத்து கும்பிட்டு 'Please...Please' என்று கூறினார். மேலும், கூட்டணி முறிவு குறித்து தற்போது எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்ய உள்ளார்.
மேலும் படிக்க
"அவங்க என்ன தப்பு செஞ்சாங்க" - மணிப்பூரில் கடத்தி கொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கதறல்