கேரள மோகினி ஆட்டக்கலைஞரின் நிகழ்ச்சியைப் பாதியில் நிறுத்திய நீதிபதி: எதிர்ப்புத் தெரிவித்து வலுக்கும் போராட்டம்!
கேரளத்தில் மோகினி ஆட்டக்கலைஞரின் நடன நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், இந்நிகழ்வு கருத்துச் சுதந்திரத்தின் மீதானத் தாக்குதல் மற்றும் கலைஞரை அவமதிக்கும் செயல் என சோசியல் மீடியாவில் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.
கேரளத்தில் மோகினி ஆட்டக்கலைஞர் டாக்டர் நீனா பிரசாந்தின் நடனத்திற்குத் தடை விதித்த நீதிபதி எதிராகப் போரட்டங்கள் வலுத்துள்ளது. மேலும் இது கேரளத்தின் கலாச்சாரத்தை அவமதிக்கும் செயல் என சோசியல் மீடியாவில் பகிரப்பட்டுள்ளது.
கேரளத்தில் பிறந்த நீனா பிரசாத், அம்மாநிலத்தின் முக்கியக் கலையான மோகினி ஆட்டத்தில் தலைசிறந்து விளங்கும் நடன கலைஞர் ஆவார். இவரின் பாவனையை ரசிப்பதற்கே ரசிகர்கள் கூடும் அலைமோதும் என்று கூறலாம். சமீபத்தில் நீனா பிரசாத், ஸ்ரீசித்ரன் எம்.ஜே எழுதிய ‘இதிஹாசங்களே தேடி’ (வரலாற்றைத் தேடி) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு, நடன நிகழ்ச்சி நடத்த அவர் அழைக்கப்பட்டார். பாலக்காட்டில் நான் சக்யம் அதாவது நட்பு என்ற தலைப்பில் அர்ஜூனனுக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள நெருங்கிய பிணைப்பைப் பற்றி அரங்கேறும் நிகழ்வாக அமைய இருந்தது. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்நிகழ்ச்சி இடையூறாக உள்ளதாகவும், டாக்டர் நீனா பிரசாத்தின் மோகினி ஆட்டத்தை நிறுத்துவதற்கு மாவட்ட நீதிபதி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மாவட்ட நீதிபதியின் உத்தரவின் படி, நிகழ்ச்சியின் இசை சத்தமாக இருந்ததாகக் காவல்துறைக்கு புகார் வந்ததாக ஏற்பட்டாளர்களால் டாக்டர் பிரசாத்துக்கு தெரிவிக்கப்பட்டதோடு மோகினி ஆட்ட நிகழ்ச்சி பாதியிலே நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து மோகினி ஆட்டக்கலைஞர் டாக்டர் நீனா பிரசாத் தனது முகநூல் பக்கத்தில் மன வருத்தத்துடன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், நடிப்பின் சிறப்பம்சை மோகினியாட்டத்தின் வாயிலாக விளக்கும் சமயத்தில், நான் நடிப்பின் சிறப்பம்சத்தை அடையவிருந்த நேரத்தில் தான் போலீஸ் வந்தது அவமானதாக இருந்ததாகப் பகிர்ந்துள்ளார். மேலும் இது எனக்கு மட்டும் அவமானம் இல்லை எனவும் இந்திய கலாச்சார சகோதரத்துவத்திற்கும், கேரள கலாச்சாரத்தை அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வால் என் கண்கள் கண்ணீரில் நிரம்பியதாகவும், என் இதயத்தில் ரத்தம் வழிந்தாகவும் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து இச்சம்பவம் கேரளத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறிய நிலையில், இந்நிகழ்விற்குக் காரணமான நீதிபதி பாஷாவுக்கு எதிராக பாலக்காடு நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிர்கள் குழு போராட்டம் நடத்தியது. இதோடு மட்டுமின்றி முக்கியத்தலைவர்கள் சோசியல் மீடியாவில் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Yet another example of Talibanization of Kerala under @vijayanpinarayi
— V Muraleedharan / വി മുരളീധരൻ (@VMBJP) March 23, 2022
No artistic freedom under communist rule
Stopping Ms. Neena Prasad's Mohiniyattam performance - Kerala's own dance form abruptly - is an insult to Kerala. pic.twitter.com/zS7whLcZty
குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் வி முரளீதரன் ட்விட்டரில், “முதல்வர் பினராயி விஜயனின் ஆட்சியில் கேரளாவில் தாலிபான் மயமாக்கலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு” இந்த சம்பவம் என்று கூறியுள்ளார். மேலும் பாலக்காட்டைச் சேர்ந்த கேரள சபாநாயகர் எம்பி ராஜேஷ், இந்தச் சம்பவத்திற்குப் பதிலளித்து, "இது கருத்துச் சுதந்திரத்தின் மீதானத் தாக்குதல் மற்றும் கலைஞரை அவமதிக்கும் செயல்" என்று கூறினார். இத்தகையப் பிரச்சனைக்குக் காரணமாக பாலக்காடு மாவட்ட நீதிபதி, ஏற்கனவே பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளார் எனக்கூறப்படுகிறது.