மேலும் அறிய

Dilip Kumar Passes Away: பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்!

பிரபல பாலிவுட் நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான திலீப் குமார் சற்று முன் காலமானார்.

பாலிவுட் உலகில் சிறந்த நடிகராக விளங்கிய திலீப் குமார் சற்று முன் காலமானார். 98 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர், சற்று முன் இயற்கை எய்தினார். 1944ல் ஜ்வார் பாட்டா படத்தில் அறிமுகமான அவர், நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டார். 1994ல் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 1998 ல் பாகிஸ்தானின் சிவிலியன் விருதான நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருது பெற்ற இரண்டு இந்தியர்களின் திலீப்குமாரும் ஒருவர். இந்தியா-பாகிஸ்தான் மக்களை நெருக்கமாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டவர். 2000 ம் ஆண்டு மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினராகவும்  பணியாற்றியுள்ளார் திலீப்குமார். அவரின் மறைவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

பாலிவுட் லெஜெண்ட் என அழைக்கப்படும் திலீப் குமார் நடிகர் மற்றும் படத்தாயாரிப்பாளர் மட்டுமின்றி அரசியல் வாழ்க்கையிலும் களம் கண்டுள்ளார். இவர் கடந்த 2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்திருந்தார். நடிகர், படத்தயாரிப்பாளர், அரசியல் பிரவேசம் என அனைத்திலும் தன்னுடைய திறமையினை மிகச்சிறப்பாக மேற்கொண்ட இவர் தற்போதுள்ள பாலிவுட் நடிகர்களுக்கு பிதாமகனாகவும் விளங்கி வருகிறார். பல்வேறு திறமைகளை தன்னிடம் கொண்டிருந்த இவர் முதுமையின் காரணமாக தன்னுடைய 98 வயதில் உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் காதல் என்ற ஒன்று இருக்கும் வரை தேவதாஸினை யாரும் மறக்க மாட்டோம், அதேப்போன்று மன்னர்களின் வரலாறுகளை நினைவுக்கூரும் பொழுது எல்லாம் ரசிகர்களின் மனதிற்கு நிச்சயம் நடிகர் திலீப் குமார் வந்து செல்வார்.

திலிப் குமாரின் திரைப்பயணத்தில் அவரது பாடல்கள் முக்கியமானவை. அவற்றை பார்க்கலாம்:

 

 

மறைந்த திலீப்குமாருக்கு தலைவர்கள் முக்கிய பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, டுவிட்டர் முழுவதும் திலீம் குமார் இரங்கல் நிரம்பி வழிகிறது. பாலிவுட்டின் பிதாமகன் திலீப்குமார்.

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?
கொல்கத்தா துர்கா பூஜையில் 3 நிமிடங்களில் கோர விபத்து.! 19 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணமா?
கொல்கத்தா துர்கா பூஜையில் 3 நிமிடங்களில் கோர விபத்து.! 19 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணமா?
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
RC Book: வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
Embed widget