மேலும் அறிய

பழைய வாகனத்தை எலெக்ட்ரிக் வாகனமாக்கும் வழிமுறை என்ன? - போக்குவரத்து துறை அப்டேட்!

பழைய வாகனங்களை மறுசீரமைப்பது எளிதாக்கப்பட உள்ளதாகவும், இதற்கான செயல் முறை விளக்கத்தை ஆன்லைனில் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் டெல்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

காற்று மாசுபாடு Vs எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு

இந்நிலையில் இந்தியாவின் காற்றின் தரம் மோசமாகவும், காற்று மாசுபாடு மிகுந்த நகரமாகவும் உள்ள தலைநகர் டெல்லி, எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி முன்னதாக ஜனவரி மாதத்தில் மட்டும் டெல்லியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டீசல் வாகனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.

பழைய வாகனங்கள் குறித்து போக்குவரத்துத் துறை உரிமையாளர்களுக்கு மூன்று தேர்வுகளை வழங்கியது. அவை, வாகனத்தை அழிப்புக்கு அனுப்புவது அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மறுசீரமைப்பு உதவிகள் மூலம் மின்சார வாகனமாக மாற்றுவது அல்லது தடையில்லாச் சான்றிதழைப் பெற்று வேறு மாநிலங்களில் விற்பனை செய்வது.

நேராக வரத்தேவையில்லை, ஆன்லைன்லயே புதுப்பிக்கலாம்

இந்நிலையில், பழைய கார்களை எளிதாகவும், பொதுமக்கள் அணுகும் வகையிலும் மாற்றும் வகையில், எரிபொருள் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது முதல் உற்பத்தியாளர்கள், பொருள்கள், விலை, டீலர்கள் மற்றும் கிட்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் வரை டெல்லி போக்குவரத்துத் துறை ஆன்லைனில் அனைத்து தகவல்களையும் வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அலுவலர்களுக்கும், தேசிய தகவல் மைய அலுவலர்களுக்குமிடையே முன்னதாக கூட்டம் நடைபெற்றுள்ளது.

சீரமைத்த வாகனங்களுக்கான மோட்டார் உரிமம்

அதன்படி, “பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மாற்றியமைப்பதற்கான விற்பனையாளர்கள் சர்வதேச ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் மையம் (ICAT) மற்றும் இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் வாகன மாற்றத்திற்கு மக்கள் அணுக வேண்டிய டீலர்கள் மற்றும் மையங்களை நிறுவும்” என போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  வாகனத்தை மறுசீரமைத்த பிறகும், வாகன உரிமையாளர் நேரில் ஒப்புதலுக்காக மோட்டார் உரிம அலுவலர்களிடம் செல்ல வேண்டியதில்லை என்றும், ஆன்லைனிலேயே ஒப்புதலைப் பெறலாம் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: World No Tobacco Day 2022: ’புகையிலை எனும் மனித குல எதிரி’ - விழிப்புணர்வு பதிவுகளால் நிரம்பிய ட்விட்டர்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Breaking News LIVE: சேலத்தில் தமிழக போலீசாரை கடப்பாரையால் தாக்கில் உத்தரபிரதேச சுற்றுலா பயணிகள்
Breaking News LIVE: சேலத்தில் தமிழக போலீசாரை கடப்பாரையால் தாக்கில் உத்தரபிரதேச சுற்றுலா பயணிகள்
Embed widget