Crime: 5ம் வகுப்பு மாணவியை மாடியில் இருந்து கீழே வீசிய கொடூர ஆசிரியை...! டெல்லியில் அரங்கேறும் கொடூரம்..
தலைநகர் டெல்லியில் 5 வயது சிறுமியை ஆசிரியை ஒருவர் முதல் மாடியிலிருந்த வகுப்பின் ஜன்னல் வழியாக ஆசிரியை வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் மிகவும் கொடுமையான ரகம் ஒன்று நடந்துள்ளது. 5ம் வகுப்பு பயிலும் சிறுமியை ஆசிரியை ஒருவர் முதல் மாடியிலிருந்த வகுப்பின் ஜன்னல் வழியாக வீசி எறிந்துள்ளார். இந்த சம்பவம் நாட்டையே அதிர்சியில் உறைய வைத்துள்ளது. டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இன்று காலை 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியை தூக்கி எறிந்த ஆசிரியை:
இது குறித்து காவல்துறை தரப்பில், நிகார் நிகாம் பாலிகா வித்யாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி வந்தனா. இவர் வழக்கம் போல் வகுப்பறையில் இருந்துள்ளார். அப்போது ஆசிரியர் கீதா தேஷ்வால் வந்தனாவை தாக்கியுள்ளார். கத்தரிக்கோலால் மாணவியை அவரை தாக்கியுள்ளார். பின்னர் அவர் வந்தனாவை வகுப்பறையில் இருந்த ஜன்னல் வழியாக கீழே வீசியுள்ளார். கீதாவை தடுக்க ரியா என்ற ஆசிரியர் எவ்வளவு முயன்றுள்ளார். ஆனால் கீதா அந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார்.
இதனைப் பார்த்து சக குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பள்ளிக்கு வெளியே இருந்தவர்கள் குழந்தை கீழே விழுவதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நாங்கள் கீதாவை கைது செய்தோம். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. எந்தச் சூழலில் எதற்காக அவர் இந்த கொடூர செயலை செய்தார் என்று இன்னும் உறுதியாகவில்லை என்றார். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளது. டெல்லி மத்திய பகுதி துணை ஆணையர் ஸ்வேதா சவுஹான் இந்த வழக்கை குழு அமைத்து விசாரித்து வருகிறார்.
தலைநகரமா கொலைநகரமா?
டெல்லியில் அண்மையில் காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய நபர் எந்த சலனமும் இல்லாமல் சிறையில் இருந்து வருகிறார். தந்தையை கொல்ல தாயுடன் திட்டம் தீட்டி கொலை செய்து உடலை 10 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் அதனை குப்பை தொட்டிகளில் வீசிய தாயும் மகனும் டெல்லியில் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இப்போது 5 வயது சிறுமியை ஆசிரியை ஒருவர் முதல் மாடியிலிருந்த வகுப்பின் ஜன்னல் வழியாக வீசி எறிந்துள்ளார்.
View this post on Instagram