மூச்சுத் திணறும் தலைநகர் டெல்லி: 530 ஆக காற்றின் தரம் குறைவு... புகைப்படங்களே சாட்சி!
தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே வேளாண் அறுவைடைக்கு பிறகு பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் விவசாயிகள் கழிவுகளை எரித்து வரும் நிலையில் தீபாவளி பட்டாசு காரணமாக காற்று மாற்று மேலும் அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் 530 ஆக காற்று மாசுபாட்டின் அளவு பதிவானது.
டெல்லியில், தீபாவளிக்கு மறுநாள் காற்று மாசு காரணமாக வாகனங்கள் புகைக்கு நடுவே பயணிக்கும் வாகனங்கள்.
காற்றின் மாசு அதிகமாக இருந்தால் ஏரோஸால் நோயான கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரஞ்சித் குலேரியா தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாட்டால் கூடுதல் காலம் காற்றில் வாழக்கூடிய கொரோனா வைரஸ், பாதிப்பை ஏற்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையை உருவாக்கலாம்.
கடுமையான காற்று மாசுபாட்டால், டெல்லி நகரவாசிகள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சரவெடிக்கு தடை, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவுறுத்தியிருந்தாலும் கூட டெல்லிவாசிகள் அதைக் கடைப்பிடிக்கவில்லை. அதனாலேயே காற்று மாசு மிக மோசமாக அதிகரித்தது.
டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் கடுமையான காற்று மாசுபாடு உருவாகியுள்ளது. இதனையடுத்து காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் தண்ணீர் அடித்து சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், விதிமுறைகளை மீறியதற்காக 92 கட்டுமான தளங்களுக்கும் தடை விதித்து டெல்லி சுகாதார அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாளை மாலை வரை இருக்கக்கூடும் என டெல்லி மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று மாசு மோசமான வரம்பிற்குள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்