NEET- UG 2022 : திட்டமிட்ட தேதியில் நீட் தேர்வு நடக்கும்... மாணவர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
திட்டமிட்ட தேதியில் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், சில மாணவர்கள் தேர்வுக்கு செல்ல முடியவில்லை என்பதால் அனைவருக்கும் தேர்வை ஒத்தி வைக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டு ஜூலை 17ஆம் தேதி நீட் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இளங்கலை நீட் தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 18,72,329 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். 8,07,711 ஆண் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல பெண் தேர்வர்கள் 10,64,606 பேர் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ஹால் டிக்கெட் கடந்த ஜூலை 12 ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Delhi High Court dismisses a petition filed by 15 medical aspirants seeking direction to the Centre, National Testing Agency (NTA) and others to postpone the National Eligibility cum Entrance Test-Undergraduate (NEET-UG) scheduled to be held on July 17. pic.twitter.com/AAbPcGFWLh
— ANI (@ANI) July 14, 2022
ஆனால் கியூட் நுழைவு தேர்வு ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரையும், ஜேஇஇ 2 ஆம் கட்ட நுழைவுத் தேர்வு ஜூலை 21 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நடுவில் ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வும் நடத்தப்பட்டதால் அடுத்தடுத்த தேர்வுகள் மாணவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை தரும் என்பதால் நீட் தேர்வை 3 அல்லது 4 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டுமென 15 மாணவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
Also Read | NEET- UG 2022 : திட்டமிட்ட தேதியில் நீட் தேர்வு நடக்கும்... மாணவர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திட்டமிட்ட தேதியில் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், சில மாணவர்கள் தேர்வுக்கு செல்ல முடியவில்லை என்பதால் அனைவருக்கும் தேர்வை ஒத்தி வைக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் வழக்கு தொடர்ந்தது மாணவர்கள் என்பதால் இம்முறை அபராதம் விதிக்கப்படவில்லை. இனியும் இப்படி மனுத்தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு நடக்கவுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்