மேலும் அறிய

Madurai: விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை - கே.பாலகிருஷ்ணன்

திமுக கூட்டணியை உடைக்க முடியாது, விஜய்க்கு யாரோ சொல்லி கொடுத்து உள்ளனர். அதை மேடையில் பேசியுள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை, அறிவிப்புகளால் திமுக கூட்டணிக்குள் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தாது என மதுரையில் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
 
தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

மதுரை புதுராமநாதபுரம் சாலை பகுதியில் கட்டப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறுகையில் "இந்தியா, தமிழகத்தில் சோசலிசத்தை அமைக்க பாடுபட்டு வருகிறோம். பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர முயற்சிக்கிறது. தமிழக நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகும் கூட மோடி அரசு பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறது. வக்பு வாரிய சட்டத்தை அமல்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது.  திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
 
விஜய் கட்சி தொடங்கி விட்டார் என்பதற்காக கருத்து சொல்ல முடியாது.

இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். சாதாரண போராட்டத்திற்கு கூட காவல்துறை அனுமதி கொடுப்பதில்லை. காவல்துறை தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ளதா? இல்லையா? என கேள்வி எழுகிறது. தமிழகத்தில் காவல்துறை சித்திரவதைகள் அதிகரித்து வருகிறது. காவல்துறை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும். தமிழக அரசு ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்பட கூடாது. அதே வேளையில் மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையீட விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். தமிழகத்தில் புதிதாக நிறைய கட்சி தொடங்கி உள்ளனர். விஜய் மாநாட்டை விட மிக பிரமாண்டமான விழாக்கள் நடைபெற்றுள்ளது. விஜயகாந்த் கட்சி தொடங்கும் போது விஜய்க்கு வந்த கூட்டத்தை விட பலமடங்கு கூட்டம் வந்தது. விஜய் கட்சி தொடங்கி விட்டார் என்பதற்க்காக கருத்து சொல்ல முடியாது.

பாஜகவை எதிர்க்கும் நிலைபாட்டில் அனைவரும் ஒன்றினைந்து நிற்க வேண்டும்

விஜய் களத்திற்கு வந்த பின்னர் தான் கருத்து சொல்ல முடியும். விஜயின் அரசியல் வருகை, அறிவிப்புகளால் திமுக கூட்டணிக்குள் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தாது. இதுகுறித்த கருத்துக்களை திமுக கூட்டணியில் உள்ளவர்கள் மிக தெளிவாக கூறி விட்டனர். மக்கள் பிரச்னைகளுக்காக திமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகளுடனும் பயணித்து வருகிறோம். கூட்டணிக்குள் இருப்பதால் சாம்சங் பிரச்னையால் தலையிடாமல் இருக்க முடியுமா?, தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறோம். ஆகவே இதற்கும், அதற்கும் சம்பந்தமுமில்லை, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியதை அவர் தான் விளக்க வேண்டும். அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் தான் கூட்டணிக்கு வருவோம் என்பதே தவறானது. கூட்டணிக்கு வந்தால் தான் பதவி என்றால் பதவிக்காக கூட்டணிக்கு வருவது போல ஆகிவிடும், கூட்டணியில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் செயலாகும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனும் கோஷம் எந்த தாக்கத்தை ஏற்படுத்தி விட போகிறது. பாஜகவை எதிர்க்கும் நிலைபாட்டில் அனைவரும் ஒன்றினைந்து நிற்க வேண்டும். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, பதவி தருகிறோம். என சொன்னால் கூட திமுக கூட்டணியை உடைக்க முடியாது, விஜயிக்கு யாரோ சொல்லி கொடுத்து உள்ளனர். அதை மேடையில் பேசியுள்ளார்" என கூறினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget