S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்
அமரன் படத்தில் மேஜர் முகுந்த வரதராஜன் பிரமணர் என்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளது என்று நடிகை மதுவந்தி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த நிலையில் பிரமணர்கள் மட்டும் தான் போர்க்களத்தில் போராடினார்களா, இஸ்லாமியார்கள் யாரும் போராடவில்லையா என்று திமுக எம்.பி எம் எம் அப்துல்லா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் குறித்து நடிகை மதுவந்தி பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. , ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அவர் எந்த சமூதாயத்தில் இருந்து வருகிறார் என்பதை தெளிவாக காட்ட வேண்டும். அதை சொல்வதற்கு இயக்குனருக்கு துப்பு இருக்க வேண்டும். உள்ளதை அப்படியே சொல்வதற்கு தைரியம் வேண்டும். அவ்வளவு பெரிய இராணுவ வீரரை பற்றி ஒருவர் படம் எடுக்கிறார். அதுவும் தியேட்டர்களில் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. ஆனால், அவர் பிராமணர் என்று காட்டுவதில் உங்களுக்கு என்ன கேடு வந்துவிட்டது என்று காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார்.
இந்நிலையில் மதுவந்திக்கு புதுக்கோட்டை திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நடிகை மதிவந்தி ராணுவ வீரர் குறித்த படத்தில் “அவர் தங்களது பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனக் காட்டவில்லை” எனக் கொதித்து இருக்கிறார். அவர் கோவம் நியாயமானதே! வரலாற்றை மாற்றுவது தவறுதான். அவரது நியாயமான கோவத்தை நான் ஆதரிக்கிறேன்.
அதே நேரத்தில் இந்த இடத்தில் உங்கள் அனைவரிடமும் ஒரு கேள்வி கேக்க விரும்புகிறேன். கார்கில் போரில் இறந்த தமிழக வீரர்களின் பெயர்களைக் கூறுங்கள்? உங்கள் அத்தனை பேருக்கும் மேஜர்.சரவணன் என்ற பெயர் நினைவில் வந்து இருக்கும்!! தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இஸ்லாமிய வீரர்களும் அதே பாக்கிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் வீர மரணம் அடைந்தார்களே!!! உங்கள் யாருக்காவது அந்த இருவரின் பெயரோ அல்லது இருவரில் ஒரே ஒருவரின் பெயரோ நினைவில் உள்ளதா? இல்லையே! ஏன்!!??
கார்கில் போர் காலத்தில் இப்போது போல சமூக ஊடகங்கள் இல்லை. இந்தியாவில் தமிழகத்தில் பெரும்பாலும் பிராமண ஊடகங்களின் ஆதிக்கம்தான்!! அவர்கள் நினைப்பது மட்டும்தான் செய்தியாக பொது புத்தியில் பதிய வைக்கப்படும்!! அந்த இருவரின் பெயரும் கவனமாக மீடியா வெளிச்சத்தில் இருந்து தவிர்க்கப்பட்டது.
பாக்கிஸ்தானுக்கு எதிராக கார்கிலில் ஒன்றுக்கு இரண்டு உயிர்களை நாட்டுக்கு குடுத்தும் தமிழ்நாட்டில் உங்களைப் போன்ற சங்கிகளால் இஸ்லாமிய சமூகம் தேசப்பற்று இல்லாதவர்கள் போலும், குற்றப் பரம்பரையாகவும் இன்னமும் சித்தரிக்கப்படுகிறோமே!! வலிகள் என்பது அத்தனை பேருக்கும் ஒன்றுதான்.. உங்களுக்கு மட்டுமல்ல. என்று பதிவில் எம்.பி எம் எம் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.