மேலும் அறிய

முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 

ஆட்சியில் பங்கு என்று முழக்கத்தை சில நாட்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா எழுப்ப திமுக கூட்டணியே பரபரப்பானது.

 கூட்டணி தொடர்பாக தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜினாவின் ஆலோசனையை ஏற்க வேண்டாம் அவருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என திருமாவளவனிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது கட்சியிலும் கூட்டணி உறவிலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

ஆட்சியில் பங்கு என்று முழக்கத்தை சில நாட்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா எழுப்ப திமுக கூட்டணியே பரபரப்பானது. பின்னர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் பேசிய பிறகு அந்த நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் அணையாமல் இன்று வரை தகித்தே வருகிறது. அதற்கு தீனிப்போட்டு மேலும் வளர்க்கும்விதமாக இன்னொரு நிகழ்வு விரைவில் அரங்கேறவிருக்கிறது.

அது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் ஒரே நிகழ்ச்சியில் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றப்போவதுதான். சென்னையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள புத்தகத்தை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. திருமாவளவனுக்கு தொலைபேசி மூலம் விஜய் வாழ்த்து சொன்னது, விஜயின் மாநாட்டிற்கு முதல் ஆளாக திருமாவளவன் வாழ்த்துச் சொல்லியது என இருவருக்குள்ளும் பரஸ்பரம் நட்பு இருந்து வரும் நிலையில், இருவரும் முதன்முறையாக பொதுவெளியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பது அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணியை கடுமையாக விமர்சிக்கும் நடிகர் விஜய் பங்கேற்பு நிகழ்ச்சியில் திருமா எப்படி பங்கேற்கலாம் என திமுக தரப்பில் கேள்வி எழுப்பி திருமாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். 

தாவெகாவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதை அப்போதே விசிக வரவேற்றது. இதை அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் இருப்போம் என திருமாவளவன் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் ஆலோசனையை கேட்க வேண்டாம் என கட்சியின் மாநில நிர்வாகிகள் திருமாவிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசிக நிர்வாகிகள் கட்சிக்கு புதியவரான ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமாவளவன் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே துணை பொது செயலாளர் பொறுப்பு கொடுத்துவிட்டனர். கட்சி நிகழ்ச்சிகளில் தன் அருகில் அமர திருமா அமர வைக்கிறார். அவர் கொடுக்கும் ஆலோசனையை ஏற்று செயல்படுகிறார். இது கட்சியிலும் கூட்டணி உறவிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என விசிகவின் மூத்த நிர்வாகிகள் புலம்புவதாக கூறப்படுகிறது. இதனால் திமுக கூட்டணிக்கு ஆதரவு எதிர்ப்பு என கட்சிக்குள் இரு கோஷ்டிகள் உருவாகி இருப்பதால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என புலம்பி வருவதாக நம்ப தகுந்த  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையெல்லாம் தவிர்க்க ஆதவ் அர்ஜூனா தரும் ஆலோசனைகளை திருமா எற்கக்கூடாது என நிர்வாகிகள் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளதாக கூறுப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்! காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விபரம்!
1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்! காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விபரம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
Embed widget