CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: கோயம்புத்தூர் கள ஆய்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ள கருத்துகளை காணலாம்.
தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என கோயம்புத்தூர் மக்களுக்கு உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காகத்தான்ம் அரசு! மக்களை மையப்படுத்திய இயங்குவதான் நல்லரசு!” என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு கீழ் அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் மக்களுக்கான சேவைகளை சரியாக செய்கிறார்களா, மக்கள் மனநிறைவுடன் பயனடைகிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ‘ உங்களில் ஒருவன்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, நவம்பர் 5, 6 (2024) தேதிகளில் கோயம்புத்தூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸாலின் ஆய்வு செய்தார். ஆய்வுப் பணி முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோவை மாவட்ட கள ஆய்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “ மக்களின் பேரன்பில் கோவை மாவட்ட கள ஆய்வு மகிழ்வாக அமைந்தது. மக்கள் பணியே லட்சியமான கொண்டுள்ளதால் மறுபடியும் திமுக ஆட்சி உறுதியானது. 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி என்ற இலக்கை அடைய கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம். கோவையில் கள ஆய்வு தொடங்கினேன். தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன். திமுகவின் கோட்டையாக கோவை திகழ்கிறது.” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“ மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன்" என்று உங்களில் ஒருவன் மடலில் குறிப்பிட்டிருந்தேன். சொன்னதைச் செய்வோம் என்பதுதானே நம் உயிர்நிகர் முன்னாள் முதல்வர் கருணாநிதி நமக்குக் கற்றுத்தந்துள்ள ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படைப் பாடம். அதன்படியே நவம்பர் 5, 6 இரண்டு நாட்களிலும் கோவை மாவட்டத்தில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளப் பயணமானேன்.” என்று கோவை கள ஆய்வு குறித்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
’உங்க ஆட்சிதான்’:
”கோவையில் உள்ள மூன்று திமுக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் - இளைஞர்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். வழிநெடுக மக்களின் முகம் பார்த்து எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் போலவே, தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான என்னைப் பார்த்து மக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி என்பது அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டு முகத்தில் பிரதிபலித்தது.
புன்னகைத்து, கையசைத்து, “அடுத்ததும் உங்க ஆட்சிதான்” என்று மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர். தாய்மார்கள் பலரும் தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அழைத்து வந்து குடும்பமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கையசைத்தனர். அந்தக் குழந்தைகளின் முகம் கண்டு நானும் மனதளவில் குழந்தையானேன்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காலத்திற்கேற்ற வளர்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், 2009-ஆம் ஆண்டு கோவையில் டைடல் பூங்காவை நம் உயிர்நிகர் முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் என்ற முறையில் டைடல் பூங்கா அமைவதற்கான பணிகளை உங்களில் ஒருவனான நான் அக்கறையுடன் கவனித்து நிறைவேற்றினேன். “ என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களாக மேலும் ஒரு தகவல்தொழில்நுட்பப் பூங்கா, உயர்மட்ட மேம்பாலச் சாலை நீட்டிப்பு, யானைகளால் பயிர்ச்சேதங்களைத் தவிர்த்திட நவீன வேலி, கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பற்றி அறிவித்தார். மேலும், கோவையில் அமையும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் பெரியார் பெயரில் அமையும் என்பதைத் தெரிவித்து, 2026 ஜனவரியில் நூலகமும் அறிவியல் மையமும் திறக்கப்படும் என்பதையும் காலக்கெடுவுடன் அறிவித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 9,10 ம் தேதிகளில் விருநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.