ரிவர்ஸ் எடுக்கும்போது விபத்து... 2 வயது குழந்தை பரிதாப பலி
அவரது பக்கத்து வீட்டுகாரர் ரிவர்ஸ் எடுத்த போது அச்சிறுமி மீது மோதியுள்ளார். இதையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டெல்லியில் பின்னால் வந்த கார் மோதியதில், இரண்டு வயது சிறுமி பலியானார். டெல்லி ரோகினி பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குழந்தை தனது வீட்டின் வெளியே சாலையில் விளையாடிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது பக்கத்து வீட்டுகாரர் ரிவர்ஸ் எடுத்த போது அச்சிறுமி மீது மோதியுள்ளார். இதையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் டிரைவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
2-Year-Old Delhi Girl Killed As Man Reversed His Car https://t.co/yTcUpuqDun
— theliveusa (@theliveusa) October 9, 2022
கடந்த மாதம், வடகிழக்கு டெல்லியில் பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டிருந்தோர் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் நடந்த போக்குவரத்து விபத்துகளும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அடங்கிய பட்டியலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
அதன்படி, கடந்த ஆண்டு (2021) நாடு முழுவதும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 659 போக்குவரத்து விபத்துகள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட (3 லட்சத்து 68 ஆயிரம்) அதிகம். அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 24 ஆயிரத்து 711 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
2-Year-Old Delhi Girl Killed As Man Reversed His Car https://t.co/bblu8KvD9C
— Pankaj Khanna (@Pankajkhanna93) October 9, 2022
தமிழ்நாடு 16 ஆயிரத்து 685 மரணங்களுடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இது மொத்த மரணங்களில் 9.6 சதவீதம் ஆகும். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், 2020-ம் ஆண்டு 46 ஆயிரத்து 443 ஆக இருந்த போக்குவரத்து விபத்துகள் எண்ணிக்கை, 2021-ம் ஆண்டில் 57 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது. 3ஆவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.
2-Year-Old Delhi Girl Killed As Man Reversed His Car https://t.co/vjb99zKZzf
— abuukasyah (@abuukas60979442) October 9, 2022