மேலும் அறிய

Minister Rajnath Singh : எமர்ஜென்சியின்போது 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்...மனம் திறக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..

"அரசியல்வாதிகள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கக்கூடாது"

எமர்ஜென்சி காலத்தில் எதிர்கொண்ட சிரமங்களை நினைவுகூர்ந்து பேசியுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 23 வயதில் பதினெட்டு மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

"ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவை மறந்தேன்"

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங், "நான் எனது மாணவப் பருவத்திலிருந்தே அரசியலில் ஆர்வமாக இருந்தேன். பின்னர், நான் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்எஸ்எஸ்) சேர்ந்தேன். படிப்படியாக அரசியலை நோக்கி நகர்ந்தேன். எமர்ஜென்சி காலத்தில் 23 வயதில் சிறைக்கு அனுப்பப்பட்டேன்.

எமர்ஜென்சியின் போது சிறையில் தள்ளப்பட்ட நான் எவ்வளவு ஒழுக்கமான மனிதனாக இருந்திருக்க வேண்டும். தேசம் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போரில் ஈடுபட்டிருந்தது. எமர்ஜென்சி விதிக்கப்பட்டபோது நானும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். 18 மாதங்கள் சிறையில் இருந்த நான் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எனது கனவை மறந்துவிட்டேன்.

சிறையில் இருந்து வெளியே வந்தவுடனேயே 25 வயதில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்ததை அறிந்தேன். இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள், எப்போது இல்லை என சொல்ல கற்று கொள்கிறார்களோ, அதிகாரிகள், ஆமாம் என சொல்ல கற்றுக் கொள்வார்களோ, அந்த நாளில் இருந்து இந்த நாடு மலர தொடங்கும். 

"சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கக்கூடாது"

இதனால் இந்திய அரசியலில் நம்பகத்தன்மை நெருக்கடி உருவாகி வருகிறது (அரசியல்வாதிகள் எல்லாவற்றிற்கும் ஆம் என்று சொல்வது, அவர்களால் செய்ய முடியாத விஷயங்களுக்கு கூட, அரசியல்வாதிகள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள்) சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கக்கூடாது" என்றார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 102ஆவது எபிசோட்டில் எமர்ஜென்சி குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, "1975 ஆம் ஆண்டு, அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசால் விதிக்கப்பட்ட அவசரநிலை, இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட காலகட்டம். லட்சக்கணக்கானோர் தங்கள் முழு வலிமையுடன் அதை எதிர்த்தனர்.

இந்தியா ஜனநாயகத்தின் தாய். நமது ஜனநாயக இலட்சியங்களை முதன்மையாகக் கருதுகிறோம். நமது அரசியலமைப்புச் சட்டத்தையே உயர்ந்ததாகக் கருதுகிறோம். எனவே, ஜூன் 25ஆம் தேதியை ஒருபோதும் மறக்க முடியாது. இந்த நாளில்தான் நம் நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. 

இந்திய வரலாற்றில் அது ஒரு இருண்ட காலம். லட்சக்கணக்கான மக்கள் அவசரநிலையை முழு மனதுடன் எதிர்த்தனர். இந்தக் கொடுமைகள் குறித்து பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள் அந்தக் காலத்தில் எவ்வளவு சித்திரவதை செய்யப்பட்டார்கள், இன்றும் அவர்களின் மனம் நடுங்குகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இன்று நாம் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாடும் போது, ​​நாட்டின் சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய குற்றங்களை நாம் பார்க்க வேண்டும். இது இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் எளிதாகப் புரிய வைக்கும்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Smriti Mandhana: ஸ்மிரிதி மந்தனா அப்பாவுக்கு என்னதான் பிரச்சினை? மருத்துவர் சொல்வது என்ன?
Smriti Mandhana: ஸ்மிரிதி மந்தனா அப்பாவுக்கு என்னதான் பிரச்சினை? மருத்துவர் சொல்வது என்ன?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Embed widget