மேலும் அறிய

Shocking Video: மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!

Dasara Elephants Clash: இரண்டு தசரா யானைகள் மைசூர் அரண்மனை வளாகத்தில் மோதிக் கொண்டு ஓடும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

Mysore Dasara Elephants Clash:  அமைதிக்கு பெயர் பெற்ற தசரா யானைகள் மைசூர் வளாகத்தில் மோதிக் கொண்டு ஓடியது அப்பகுதியில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது.

மோதலில் தசரா யானைகள்:

அப்போது, மைசூர் அரண்மனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு உணவு உண்ணும் போது தசரா யானைகளான தனஞ்சயா மற்றும் காஞ்சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சிறிய மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனஞ்சய  யானை, காஞ்சனைத் தாக்கி துரத்த முயன்றது. அப்போது, காஞ்சன் யானை பாகன் இல்லாமலேயே முகாமிலிருந்து வெளியேறி, இரும்பு தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு மைசூர் அரண்மனையின் ஜெயமார்த்தாண்ட வாயிலில் உள்ள கண்காட்சி சாலை அருகே தப்பிச் சென்றது. இதையடுத்து,  மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தடுமாற்றத்துடன் ஓடினர்.

இதையடுத்து தனஞ்சயவின் யானை பாகன் இறுதியில் சமாதானப்படுத்தினார்.  மேலும் தனஞ்சய யானையை மீண்டும் முகாமுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கஞ்சன் யானையும் சாந்தமானது.  இந்த யானையானது பாகன் மற்றும் வன அதிகாரிகளால் மீண்டும் முகாமுக்கு அழைத்து சென்றார்.

AnxietyGrips as 2DasaraElephants fight,run out of Palacepremises;Elephants pacified,BroughtBack toPalace;Noharm/damage@DeccanHerald pic.twitter.com/TZ8O4bmhoT

— Shilpa P. (@shilpapdcmysuru) September 21, 2024

இச்சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் எந்த சொத்துக்கும் சேதம் ஏற்படவில்லை.  கடந்த இருபது ஆண்டுகளில் தசரா யானைகள் முகாமில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை. தசரா யானைகள்,  பொதுவாக அமைதிக்கு பெயர் பெற்றவை, அவை பயிற்சி அமர்வுகளின் போது நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியிலும், ராஜ மார்க்கா அல்லது தசரா ஊர்வல பாதையில் ஜம்பூ சவாரி ஊர்வலத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் மத்தியிலும் கூட அமைதியை இழக்காது, கம்பீரத்துடன் அமைதியாக நடந்து செல்லும்.

மைசூரில் தசரா நிகழ்வு என்றாலே யானை சவாரிதான் பலருக்கும் ஞாபகம் வரும். அங்கு ஜம்பு சவாரி ஊர்வலமானது மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. அங்கு ஊர்வலமாக செல்லும் 2 யானைகள் அமைதியுடன் சாந்தமாக செல்லும். இந்நிலையில், சாந்தத்திற்கு பெயர் பெற்ற 2 யானைகளானது திடீரென மோதலில் ஈடுபட்டு மைசூர் வளாகத்தில் ஓடிய இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த யானைகளானது புதியதாக சமீபத்தில்தான் அழைத்து வரப்பட்டன என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு -  தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு - தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு -  தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு - தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
Nalla Neram Today Sep 21: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 21:சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Udhayanidhi - Rajini : ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
Embed widget