![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cyclone Mandous: புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் மாண்டஸ் புயல்...வானிலை மையம் தகவல்
இன்று மாலை உருவாகவுள்ள மாண்டஸ் புயலானது புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
![Cyclone Mandous: புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் மாண்டஸ் புயல்...வானிலை மையம் தகவல் Cyclone Mandous Makes Landfall Between Puducherry-Sriharikota TN Weather News Latest Update Cyclone Mandous: புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் மாண்டஸ் புயல்...வானிலை மையம் தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/0ed2a79959f3be98e7e99d186557a1a01670407862092571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உருவாகும் புயல்:
இது மேலும் வலுப்பெற்று, இன்று மாலை புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 8 ஆம் தேதி காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்க கடலை அடைய வாய்ப்புள்ளது.
இதை தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி, மாண்டஸ் புயலானது நகர வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 7, 2022
மழை எச்சரிக்கை:
டிசம்பர் 8 ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் தென் கடலோர ஆந்திரப் ஒட்டியுள்ள பகுதிகளில் கன முதல் மிக கனமழையுடன் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 9 அன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் மற்றும் வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, தெற்கு கடலோர ஆந்திராவை ஒட்டிய பகுதியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அந்தமான் கடல் பகுதிகள்: 07.12.2022 அன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 08.12.2022 அன்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 07.12.2022 அன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 08.12.2022 அன்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தமிழக- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகள் : சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் 08.12.2022 அன்று காலை தொடங்கி காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 08.12.2022 மாலை முதல் 09.12.2022 மாலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், 09.12.2022 மாலை முதல் 10.12.2022 காலை வரை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 10.12.2022 மாலை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)