Cow Hug Day: காதலர் தினம் வேணாம்! பசுவை கட்டி புடிக்கனுமா? - கொதித்தெழுந்த சு.வெங்கடேசன் எம்.பி!
விலங்குகள் நல வாரியத்தின் இந்தக் கோரிக்கை அரசியல் தலைவர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை அனைத்து தரப்பினரிடையேயும் தொடர்ந்து கண்டனங்களைப் பெற்று வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பிப்.14ஆம் தேதியை காதலர் தினமாகக் கொண்டாடி மகிழ்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு முதல் பிப்.14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் இந்திய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
பசு அணைப்பு தினம்
நேற்று இது குறித்து கோரிக்கை விடுத்திருந்த விலங்குகள் நல வாரியம், “நம் வேத கால பழக்கவழக்கங்கள் மேற்கத்திய பண்பாடுகளால் அழியும் நிலையில் உள்ளதாகவும், பசுவை அரவணைப்பதன் மூலம் பேருவகை அடைய முடியும் என்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், விலங்குகள் நல வாரியத்தின் இந்தக் கோரிக்கை அரசியல் தலைவர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை அனைத்து தரப்பினரிடையேயும் தொடர்ந்து கண்டனங்களைப் பெற்று வருகிறது.
சு.வெங்கடேசன் காட்டம்
அந்த வகையில் முன்னதாக இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “இந்தியாவில் மகிழ்ச்சி பொங்க இரண்டு வழிமுறைகளை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதானியை மோடி அணைப்பார்; மக்கள் பசுவை அணைக்க வேண்டும். இதுவல்லவோ அரசு” என தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 8, 2023
“மகிழ்ச்சி பொங்க”
இரண்டு வழிமுறைகளை
ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதானியை மோடி அணைப்பார்.
மக்கள் பசுவை
அணைக்க வேண்டும்.
இதுவல்லவோ அரசு. pic.twitter.com/NurgDFHUqj
டி.ஆர்.பி ராஜா ட்வீட்
இதேபோல் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக ஐடி விங் மாநிலச் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா தனது பதிவில், “என்ன எழவுடா இது? சங்கிகள் வருகிறார்கள்! பசுக்களே ஜாக்கிரதை. இந்த பசு அணைப்பு தினத்தையும் நெதர்லாந்தை பார்த்துதான் காப்பி அடித்துள்ளார்கள். இது சங்கிகளின் பசுவின் மீதான உண்மையான அன்பின் வெளிப்பாடு அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
என்ன எழவுடா இது 🤦🏽😂
— Dr. T R B Rajaa (@TRBRajaa) February 8, 2023
சங்கிகள் வருகிறார்கள் !
பசுக்களே ஜாக்கிரதை !😅
And even this #CowHugDay is a COPY from Netherlands : )
Called "koe knuffelen" in Dutch #CowHugging is not an original outpouring of love for the cow by the sanghis 😇 #Sangithva pic.twitter.com/uuMLwR9JQO
வாழ்க்கையை தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாக மாற்றும் வகையிலும் பசுப்பிரியர்கள் பிப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினம் கொண்டாட வேண்டும்” எனவும் விலங்குகள் நல வாரியம் கோரியுள்ளது.