Watch Video: நாய்க்குட்டிகளுக்கு தாயான பசு.! பசிக்கு பாலூட்டி நெகிழ்ச்சி - வைரல் வீடியோ!
பசு ஒன்று தாய் இல்லாமல் தவிக்கும் நாய்க்குட்டிகளுக்கு பால் ஊட்டும் வீடியோ வெளியாகி இணையவாசிகளை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியுள்ளது.
இணையத்தை மனிதர்களை எவ்வளவு தான் ஆக்கிரமிக்க முயன்றாலும் அவர்களை தூக்கி சாப்பிட்டு க்யூட் விலங்குகளும் பறவைகளும் ட்ரெண்ட் ஆவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
நாய், பூனைகள் தொடங்கி ஆமைகள், ஆந்தைகள் வரை பல வித்தியாசமான செல்லப் பிராணிகளும், காட்டு உயிரினங்களும் மனிதர்கள் உறவாடி வாழும் விலங்குகள், பறவைகளும் நெட்டிசன்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
அந்த வகையில் முன்னதாக பசு ஒன்று தாய் இல்லாமல் தவிக்கும் நாய்க்குட்டிகளுக்கு பால் ஊட்டும் வீடியோ வெளியாகி இணையவாசிகளை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியுள்ளது
It can happen only in India.
— Susanta Nanda IFS (@susantananda3) August 3, 2022
Cow mothering abandoned pups 🙏🙏 pic.twitter.com/5QnMZF4RI5
ட்விட்டரில் 23,800 பார்வையாளர்களைக் கடந்து நெட்டிசன்கள் ரசித்து மகிழும் இந்த வீடியோ 2000 லைக்குகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக இரு வேறு உயிரினங்கள் நட்பு பாராட்டும் இத்தகைய வீடியோக்கள் அதிகம் ரசிக்கப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
View this post on Instagram
அந்த வகையில் முன்னதாக ஆமை ஒன்று முன்னதாக அதன் ஓனரின் செல்ல நாய்கள், பூனைகளுடன் நட்பு பாராட்டும் வீடியோக்கள் இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆனது.
What type of pet is that bro?pic.twitter.com/SjlJRYJsDA
— Figen (@TheFigen) August 2, 2022
அதே போல் அபாயகரமான உயிரினமான முதலை மனிதர் ஒருவருடன் நட்பு பாராட்டும் வீடியோவும் முன்னதாக ட்விட்டரில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்