India Corona Spike: இந்தியாவில் ஒரே நாளில் 10,158 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு.. புதிய உச்சம்.. முழு விவரம்..
இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் 10,158 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் 10,158 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது.
Covid-19 | India reports 10,158 new cases in last 24 hours; the active caseload stands at 44,998
— ANI (@ANI) April 13, 2023
(Representative Image) pic.twitter.com/yS0pdGdjbf
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ நெருங்குகிறது. இந்தியாவில் நேற்று 40,215 ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்போது உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் தினசரி பாதிப்பு 10,000 ஐ கடந்து பதிவாகியுள்ளது. தற்போது இந்தியாவில் xbb 1.16 மற்றும் ba2 வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு புதிய உச்சமடைந்து வருகிறது. மொத்தமாக 44,998 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புவர்களில் சதவீதம் 98.72 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )