மேலும் அறிய

COVID: உலக நாடுகளை புரட்டி எடுக்கும் கொரோனா; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்; நடப்பது இதுதான்..!

COVID: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேகமாக செய்து வருகின்றது.

COVID: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேகமாக செய்து வருகின்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பரவி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸின் உருமாறிய வைரஸ், அதாவது சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கொரோனா முதல் அலை இரண்டாவது அலை என புரட்டி எடுத்ததைப் போலவே அடுத்த கொரோனா அலையாக, உருமாறிய கொரோனா பரவலும் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவின் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக இந்த உருமாறிய வைரஸ் தொற்றால், வயதில் முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். 

சீனாவைப் பொறுத்தவரை கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டால், அதனை கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு என குறிப்பிடாமல், நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என குறிப்பிடுகிறது. இதனால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை மிகக் குறைவாக காட்டப்படுகிறது. ஆனால், தகன மையங்களில் உடல்கள் நிரம்பி வழிவதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன. 

சீனாவில் மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்க காராணமே  ”ஜீரோ கோவிட்” என்ற நடைமுறையை சீன அரசு நடைமுறைப்படுத்தி மக்களை எந்தவிதமான கட்டுப்பாடுகள் இன்றியும், குறைந்த பட்சம் முகக்கவசம் அணியக் கூட அரசு அறிவுருத்தாததுதான் காராணம் என கூறப்படுகிறது. 

உலக சுகாதார அமைப்பு கவலை

சீனாவைப்போல், பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், உலக சுகாதார அமைப்பின் அவசர நிலைத் தலைவர் மைக்கேல் ரேயான் கூறுகையில், “ கொரோனாவால் உயிரிழப்பவர்கள், தொற்று பாதிப்பால் பல்வேறு உறுப்புகள் செயலிழந்து மரணத்தை தழுவுகின்றனர். எனவே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உறுதிபடுத்தப்பட்ட பின்னர் அவர் சுவாசக்கோளாறால் இறந்தால் அவர்களை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களாக காட்ட மறுப்பது கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை மறைப்பதாகும். இதனை வைத்து பார்க்கும் போது சீனாவில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பு குறித்த வரையறை என்பது மிகவும் குறுகலாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

உலக நாடுகள் ஏற்கனவே விமான நிலையங்களிலும், தங்களது நாட்டு எல்லைகளிலும், மீண்டும் கொரோனா பரிசோதனையை அமல்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொறுத்த்வரையில், மீண்டும் முகக் கவசம் அணிய அறிவுருத்தப்பட்டுள்ளது. அதேபோல், விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் தொற்று பரவலை தடுக்க அவசர ஆலோசனைக் கோட்டம் டெல்லியில் நடைபெற்றது.

பாராளுமன்றத்தில் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மான்சுக் மாண்ட்வியா கூறுகையில், ”கடந்த சில நாட்களில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை காண்கிறோம். சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதோடு, அங்கு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆனால், இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை காண முடிகிறது.

கொரோனா தொற்றை நிர்வகிப்பதில் சுகாதாரத் துறை மிகவும் முனைப்பாக உள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது. மாநில அரசுகளுக்கு இதுவரை , 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார். 

மாஸ்க் அணிய வலியுறுத்தல்:
 
உலகளவில் தொற்று பரவல் நிலைமையை கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கொரோனா தொற்றின் புதிய மாறுபாட்டை சரியான நேரத்தில் அடையாளம் காண மரபணு வரிசைமுறை சோதனையை  அதிகரிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
 
பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தை அடுத்து, மக்கள் மாஸ்க் அணிவதையும், சானிடைசர்களைப் பயன்படுத்துவதையும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளோம்.
 
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளிடையே ரேண்டம் முறையில்  RT-PCR முறையில் மாதிரிகளை சேகரிக்க தொடங்கியுள்ளோம். கொரோனா தொற்றுநோயை முறையாக கையாள அரசு உறுதிபூண்டுள்ளோம், அதற்கான  உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,  மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கமளித்துள்ளார்.
 
மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு:
 
இதனிடையே,  செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  "ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவுகிறது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி கொரோனா டெஸ்ட் எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். மக்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதம் கடந்திருக்கிறது. கொரோனா வைரஸ் 10 விதமாக உருமாற்றம் பெற்றுள்ளது.

கண்காணிப்பு தீவிரம்:

கொரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா ப்ளஸ், காமா, கப்பா, ஒமிக்ரான் என உருமாறிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட போதிலும் கூட தமிழகத்தில் உயிரிழப்பு இல்லாமலே இருந்து வந்தது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு 4 கோடி ரூபாய் செலவில் மரபணு பகுப்பாய்வு கூடம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் குறைவாகவே பரவுகிறது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget