Fact Check | வானில் வெடித்து சிதறும் ஹெலிகாப்டர்: வைரலாகும் வீடியோ.. உண்மை என்ன?
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர். ஒரு ஆண் மட்டும் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து இந்திய விமானப் படை இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், ’’துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்.
Gp Capt Varun Singh SC, Directing Staff at DSSC with injuries is currently under treatment at Military Hospital, Wellington.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
கேப்டன் வருண் சிங், படுகாயங்களுடன் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து என சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது உண்மையா?
உண்மை என்ன?
அந்த வீடியோ இன்று குன்னூரில் எடுக்கப்பட்டது அல்ல. அந்த வீடியோ 2020ல் சிரியாவில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்து ஆகும்.
Fake Fake Fake it's sryian Mi17 shootdown in 2020https://t.co/c9VcGjhSzu
— Patriot🇮🇳 (@Patriot_005) December 8, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்