மேலும் அறிய

பாஜகவை வீழ்த்தவேண்டும் என வந்துவிட்டால், காங்கிரஸ் ஆம் ஆத்மி தலைமையைக்கூட ஏற்கும் - ப.சிதம்பரம் 

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தனது கட்சி தயாராக உள்ள நிலையில், பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர் சிதம்பரம் கூறினார்.

பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி தலைமையின் கீழ் இருக்கக்கூட காங்கிரஸ் விரும்புவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விகளுக்கு காந்தி குடும்பம் மட்டுமே பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸின் ஜி-23 கூட்டத்திற்கு பிறகு தனியார் ஆங்கில டிவிக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், "5 மாநில தேர்தல் தோல்விக்கு பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பதவி விலக முன்வந்தனர். ஆனால் அதை காங்கிரஸ் கமிட்டி ஏற்கவில்லை. எனவே,  புதிய காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை நாம் விரைவுபடுத்த வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாதம்தான் அது நடக்கும். அதுவரை சோனியா காந்தி தலைமை தாங்குவார் என்று நான் உட்பட அனைவரும் நம்புகிறோம்.
சோனியா காந்தி தேர்தலை முன்னெடுக்க பரிந்துரைத்தார். ஆனால் பெரும்பாலான தலைவர்கள் ஏற்கவில்லை. கபில் சிபல் போன்ற "ஜி-23" தலைவர்கள் தேர்தலில் தோல்வியடைந்த கட்சிக்கு புத்துயிர் அளிக்க புதிய தலைமைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சமீபத்திய தோல்விகளுக்கு காந்தி குடும்பத்தினரை மட்டுமே குற்றம் சொல்ல வேண்டும் என்று சொல்வது தவறு. நான் கோவாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது போல காந்தி குடும்பத்தினர் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் மற்ற மாநிலங்களுக்கு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். பொறுப்பில் இருந்து யாரும் ஓடுவதில்லை. ஆனால் தொகுதி, மாவட்டம், மாநிலம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டத்தில் தலைமைப் பதவியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. 

பாஜகவை வீழ்த்தவேண்டும் என வந்துவிட்டால், காங்கிரஸ் ஆம் ஆத்மி தலைமையைக்கூட ஏற்கும் - ப.சிதம்பரம் 

ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் முழுநேர தலைமைத்துவத்தைப் பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் கட்சி அமைப்பில் தேவையான மற்றும் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே நாம் செய்யக்கூடியது. சோனியா காந்தி அதைச் செய்கிறார் என்று நான் நம்புகிறேன்.

அதுவரை கட்சியின் பிளவு ஏற்படாது என்று நம்புகிறேன். கட்சியை பிளவுபடுத்த வேண்டாம் என்பதே ஜி23 தலைவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஆகும். எனது மற்றொரு வேண்டுகோள் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுதான். அனைவரும் திரும்பிச் சென்று கட்சிப் பிரிவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்” என்றார்

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தனது கட்சி தயாராக உள்ள நிலையில், பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர் சிதம்பரம் கூறினார்.

“ஒவ்வொரு கட்சியும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பொருந்தும். மாநிலம் வாரியாக போராட்டம் இருக்கும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தலைமையில் போராட வேண்டும். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து போராட வேண்டும். தலைவராக, மாநிலம் வாரியாக பாஜகவை எதிர்த்துப் போராடினால், அதைத் தோற்கடிக்க முடியும். பல மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. தொகுதி கமிட்டிகளை கலைத்துவிட்டு மீண்டும் அமைக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் பல ஆண்டுகளாக கட்சி வறண்டு கிடப்பதை நாம் அனைவரும் அறிவோம். முதலில் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும், அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வேண்டும். இதுதொடர்பாக நான் தலைமைக்கு எடுத்துரைத்துள்ளேன்.

கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் போன்றோர் சுட்டிக்காட்டியதை நான் சுட்டிக் காட்டினேன். பல்வேறு இடங்களில் தலைவர்கள் இல்லை, தொண்டர்கள் மட்டுமே உள்ளனர். அரசியல் ஆர்வம், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நாட்டம் உள்ள தலைவர்களை அடையாளம் காண வேண்டும். கட்சிக்கு 24/7 உழைக்கும் தலைவர்கள் தேவை. 40, 50 மற்றும் 60 வயதுகளில் உள்ளவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அவர்கள் தொகுதி அளவில் முழுநேரமாக இருக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு பணம் தேவைப்படும். முழு நேரப் பணியாளர்கள், முழுநேர அலுவலகப் பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Embed widget