Rahul Gandhi Speech: “நாட்டிற்காக நான் ரத்தம் சிந்தவில்லை; ஆனால் என் குடும்பம் சிந்தியிருக்கிறது” - பாஜகவை வெளுத்து வாங்கிய ராகுல்
”சீனாவையும், பாகிஸ்தானையும் சேரவிடாது இருப்பதே இந்தியாவின் திட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இரு நாடுகளையும் ஒன்று சேர்த்திருக்கிறது.” - ராகுல் காந்தி
2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் நிகழ்வு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரையில் நமது நாடு இப்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைப் பற்றி பேசவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, ”இஸ்ரேலுக்கு சென்ற பிரதமர் மோடி பெகாஸஸிற்கு அங்கீகாரம் அளிக்கும்போது, அவர் தமிழ்நாடு மக்களை தாக்குகிறார், அஸாம் மக்களை தாக்குகிறார். மிகவும் ஆபத்தான ஒரு விஷயத்தில் விளையாடுகிறீர்கள். இந்த நாட்டிற்காக நான் ரத்தம் சிந்தவில்லை என்றாலும், எனது குடும்பம் ரத்தம் சிந்தி இருக்கிறது. என் அப்பா தூள்தூளாக வெடித்து சிதறினார்” என பேசினார்.
வீடியோவைக் காண:
#JUSTIN | என் பாட்டி சுட்டுக்கொல்லப்பட்டார்...என் தந்தை குண்டு வெடிப்பில் இறந்தார்.. எனக்கா நாட்டின் மீது அக்கறை இல்லை? - ராகுல் காந்திhttps://t.co/wupaoCQKa2 | #LokSabha #RahulGandhi #BJP #Congress #BudgetSession pic.twitter.com/rAgFXleEEO
— ABP Nadu (@abpnadu) February 2, 2022
தொடர்ந்து பேசிய அவர், “மணிப்பூரில் இருந்து வந்த அரசியல் கட்சி தலைவர் ஒருவர் என்னிடம் பேசி கொண்டிருந்தார். அவர் அமித் ஷாவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, காலணிகளை வெளியே கழற்றி வைக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால், வீட்டினுள் அமித் ஷா காலணிகளுடன் இருந்திருக்கிறார். இந்திய மக்களை இப்படி நடத்தக்கூடாது” என தெரிவித்தார்.
அடுத்து, “இந்திய குடியரசு தின நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்கள் யாரும் வருவதில்லை என உங்களையே நீங்கள் கேள்வி கேளுங்கள். ஏனென்றால், இந்தியா தனிமையாக இருக்கிறது. நாம் மிகவும் வலுவிழந்து இருக்கிறோம். நாம் தாக்கப்படும் நிலையில் இருக்கிறோம். என்ன செய்ய வேண்டும் என்பதில் சீனா தெளிவாக இருக்கிறது. சீனாவையும், பாகிஸ்தானையும் சேரவிடாது இருப்பதே இந்தியாவின் திட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இரு நாடுகளையும் ஒன்று சேர்த்திருக்கிறது. இது இந்தியா எதிர்கொள்ள இருக்கும் மிகப் பெரிய அபாயம். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பெரிய தவறு செய்துவிட்டோம்” என பேசி இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்