மேலும் அறிய

"பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அல்ல.. மக்கள ஏமாத்துறாரு" பரபரப்பை கிளப்பும் ராகுல் காந்தி!

பொது பிரிவில் பிறந்தவர் என்பதால் தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி நடத்த விடமாட்டார் என ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்டை தொடர்ந்து ஒடிசா சென்றடைந்துள்ளது.

பிரதமர் மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

ஒடிசா மாநிலத்தில் யாத்திரையின்போது பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பிரதமர் மோடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்தவர் அல்ல, பொதுப்பிரிவை சேர்ந்த அவர் தன்னை ஓபிசி என சொல்லி கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாக பேசியுள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி, ஓபிசி சமூகத்தில் பிறக்கவில்லை. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். கடந்த 2000 ஆம் ஆண்டு, தெலி சாதியை பா.ஜ.க.தான் ஓபிசி பிரிவில் சேர்த்தது. பொது பிரிவை சேர்ந்தவர் பிரதமர் மோடி. அவர் ஓபிசி சமூகத்தில் பிறக்கவில்லை, பொது பிரிவில் பிறந்தவர் என்பதால் தன் வாழ்நாள் முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விடமாட்டார்" என்றார்.

மக்களவை தேர்தலுக்கு 45 நாள்கள் கூட இல்லாத நிலையில், பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் ஓபிசி மற்றும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது.

ஓபிசி அரசியலை கையில் எடுத்துள்ள ராகுல் காந்தி:

குறிப்பாக, ஓபிசி மக்களுக்கான அரசியலை கையில் எடுத்துள்ள ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு நேர் எதிராக, தேர்தல் பிரச்சாரம் தொடங்கி நாடாளுமன்ற வரை, பிரதமர் மோடி தன்னுடைய ஓபிசி அடையாளத்தை முன்னெடுத்து வருகிறார்.

நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருப்பதால் அவர்களை தன் பக்கம் இழுப்பதில் காங்கிரஸ், பாஜக போட்டியிட்டு வருகிறது.

ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் மாநில கட்சிகளே செல்வாக்கு மிக்கதாக உள்ளன. குறிப்பாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஓபிசி மக்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது.

வரும் மக்களவை தேர்தலில், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களே மத்தியில் ஆட்சி அமைப்பார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காருண்யா லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!
காருண்யா லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
நேருக்கு நேர் பிரதமர் மோடி - ராகுல் திடீர் சந்திப்பு! வெளியானது முக்கிய வீடியோ - இருவருக்கும் இடையே நடந்தது என்ன?
நேருக்கு நேர் பிரதமர் மோடி - ராகுல் திடீர் சந்திப்பு! வெளியானது முக்கிய வீடியோ - இருவருக்கும் இடையே நடந்தது என்ன?
நோ பணம்.. இனி டிஜிட்டல் பேமெண்ட் தான்.. சுங்கச்சாவடியில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
நோ பணம்.. இனி டிஜிட்டல் பேமெண்ட் தான்.. சுங்கச்சாவடியில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Manifesto: “சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
“சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
TVK Vijay: “லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
“லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
Mojtaba Khamenei: “உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
“உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Embed widget