Rahul Gandhi | விவசாயிகளுக்கு ஆதரவு... டிராக்டரில் நாடாளுமன்றம் வந்த ராகுல்காந்தி!
விவசாய சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து ராகுல்காந்தி, நாடாளுமன்றத்துக்கு ட்ராக்டரில் வந்தார்.
விவசாய சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து ராகுல்காந்தி, நாடாளுமன்றத்துக்கு ட்ராக்டரில் வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் செய்தியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளேன். விவசாயிகளின் குரல்களை அரசு அடக்குகிறது. நாடாளுமன்றத்தில் ஒரு விவாதமும் நடக்கவிடவில்லை. அவர்கள் இந்த கருப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் 2-3 பெரிய வணிகர்களுக்கு சாதகமானது என முழு நாட்டிற்கும் தெரியும் என்றார்
மேலும் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அரசு கூறுகிறது. அங்கே வெளியே அமர்ந்து போராடும் விவசாயிகளை அரசு, பயங்கரவாதிகள் என்கிறது. உண்மைநிலை என்னவென்றால், விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றார்.
As per Govt, farmers are very happy and those (protesting farmers) sitting outside are terrorists. But in reality, farmers' rights are being snatched away: Congress leader Rahul Gandhi after driving a tractor to Parliament pic.twitter.com/GGee9POAvC
— ANI (@ANI) July 26, 2021