ஏர் இந்தியா விமான விபத்துக்கு பின்னணியில் தீவிரவாதிகளா? மத்திய அமைச்சர் பகீர் தகவல்
ஏர் இந்தியா விமான விபத்துக்கு பின்னணியில் தீவிரவாதிகளின் சதிச் செயல் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அனைத்து கோணங்களில் இருந்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் இதற்கு பின்னணியில் தீவிரவாதிகளின் சதிச் செயல் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏர் இந்தியா விமான விபத்து:
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்து உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கடந்த 12ஆம் தேதி, அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகளும், விமானம் மோதியதில் 33 பேரும் என 274 பேர் உயிரிழந்தனர். விமானம் வெடித்துச் சிதறியதில் ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் மற்ற பயணிகள் அனைவரும் தீக்கிரையாகினர்.
எதிர்காலத்தில் இம்மாதிரியான விமான விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் விரிவான நெறிமுறைகளை தயார் செய்ய உள்துறை செயலாளர் தலைமையில் மத்திய அரசு உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பின்னணியில் தீவிரவாதிகளா?
இந்த நிலையில், இதற்கு பின்னணியில் தீவிரவாதிகளின் சதிச் செயல் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "(விமான விபத்து) ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். AAIB இது குறித்து முழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்கு பின் நாசவேலை இருக்கிறதா உட்பட அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரிக்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு அனைத்து கோணங்களும் மதிப்பிடப்படுகின்றன. பல நிறுவனங்கள் இதில் பணியாற்றி வருகின்றன.
மீட்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 171-இன் கருப்புப் பெட்டி AAIB வசம் உள்ளது. முழு ஆய்வுக்காக நாட்டிற்கு வெளியே எடுத்துச் செல்லப்படாது" என்றார்.
இதையும் படிக்க: Magalir Urimai Thogai: அடித்தது ஜாக்பாட், விதிகளை தளர்த்திய தமிழக அரசு - யாருக்கெல்லாம் ரூ.1000? உரிமைத்தொகை




















