CM Delhi Visit: அதிரடி திட்டத்துடன் டெல்லி செல்லும் முதல்வர்...! நடக்கப்போகும் அரசியல் நகர்வு என்ன..?
ஜி- 20 மாநாடு தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ளார்.

ஜி-20 மாநாட்டை, இந்தாண்டு தலைமையேற்று நடத்துவதற்கான பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. அதையடுத்து, ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்தும் பொருட்டு, இந்தியா பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
இதையடுத்து, ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்தும் பொருட்டு ஆலோசனை கூட்டத்துக்கு, நாளை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் பல மாநிலங்களிலிருந்து தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
இந்நிலையில், ஜி- 20 மாநாட்டுக்கான பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவுள்ளார். இதையடுத்து மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை டெல்லி புறப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நாளை இரவே விமான மூலம் சென்னை திரும்பவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு, ஆளுநர் ஒப்புதல் தராதது குறித்தும், மத்திய அமைச்சரிடம் பேச வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் டெல்லி வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள், முக்கிய அரசியல் தலைவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. உலக நாடுகள் தொடர்பாக நடைபெறும் கூட்டத்தால், இக்கூட்டத்தில் கட்சி வேறுபாடின்றி, பல்வேறு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். டெல்லியில் நாளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரே நேரத்தில் சந்திக்க உள்ளதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி- நாடுகள்:
ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
Padharo Mhare Desh! As the inaugural meeting of the #G20India Presidency begins tomorrow in Udaipur, Rajasthan, the city of lakes and palaces is ready to welcome #G20 delegations @my_rajasthan pic.twitter.com/pgq1ZwdD7Z
— G20 India (@g20org) December 4, 2022
இந்தாண்டில், இந்தோனேசியாவில் ஜி 20 மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Behind the scenes from 1st Sherpa Meeting, Udaipur! #G20India pic.twitter.com/Zit66SWSih
— G20 India (@g20org) December 4, 2022
இந்நிலையில், ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்தும் பொருட்டும், மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில், விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் வண்ண விளக்குகளால் ஒளிர விடப்பட்டுள்ளன.
Also Read: G20 presidency 2023: ஜி 20 மாநாடு; இந்தியா சார்பில் பிரதமர் மோடியிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைப்பு..





















