Assembly Election 2023: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு நிறைவு!
சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
இதேபோன்று பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேச மாநிலத்திலும் இன்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், நக்சல்களால் பாதிக்கப்பட்ட தொகுதிகளில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Women in Madhya Pradesh are turning out in high numbers, surpassing men at polling centers, thanks to the Ladli Bahan Yojana and increased awareness. Goes to show Shivraj ji's emotional connection with women through the scheme. #MadhyaPradeshElections pic.twitter.com/Bb9EWsnc3y
— vi (@oyevivekk) November 17, 2023
இந்த நிலையில் ஒரே கட்டமாக மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 230 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 71.16 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான நகுல்நாத்தை, சிந்த்வாராவின் பரரிபுராவில் உள்ள வாக்குச் சாவடிக்குள் நுழைய விடாமல் பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.