மேலும் அறிய

Chandrayaan 3 Launched: அதிரடி.. விண்ணில் சீறிப்பாய்ந்த சந்திரயான் 3.. வரலாற்றுச் சாதனை படைத்த இஸ்ரோ.. நெகிழ்ச்சி தருணம்..

நிலவின் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்ளும் சந்திரயான் 3 இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

உலக நாடுகளே உற்று நோக்கிய சந்திரயான் 3 சரியாக மதியம் 2.35 மணி அளவில் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதற்கான 25 மணி நேர 30 நிமிட கவுண்டவுன் நேற்று மதியம் 1.05 மணிக்கு தொடங்கியது.

சந்திரயான் திட்டம்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது.

சந்திரயான் – 2 ஜூலை மாதம் 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் – 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ. 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது

சந்திரயான் 3 வெற்றி எப்படி சாத்தியமானது:

கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சியிலும் விஞ்ஞானிகள் செயல்பட்டனர். அந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க  பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சந்திரயான்-3 மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் இன்ஜினின் சோதனை  அதாவது இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.

சந்திரயான் 3 விண்கலத்தில் laser doppler velocity metre எனப்படும் புதிய சென்சார் கருவியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.  இதில் இருந்து வெளிப்படும் லேசர் ஒலி மூலம், மூன்று வேக திசையான்களின் (Three velocity Vectors) தகவல்களை பெற முடியும். மேலும், இன்ஜின் பிரச்னை, உந்துதல் இடையூறு, சென்சார் செயலிழப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது.  புதிய லேண்டர் கருவியின் எடை 200 கிலோ அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் லேண்டிங்கின் போது குறைந்தது 2 இன்ஜின்கள் செயல்படுவது அவசியம். அதன் காரணமாகவே எடையை குறைக்கும் நோக்கில், சந்திரயான் - 2 விண்கலத்தில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட மத்திய இன்ஜின் தற்போது அகற்றப்பட்டுள்ளது.  

இப்படி பலமுறை சோதனை செய்தபின், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட பின் விஞ்ஞானிகளால் மிகவும் கவனமாக சந்திரயான் 3 உருவாக்கப்பட்டது. பலரின் கனவு மெய்ப்படும் வகையில் இன்று இஸ்ரோ வரலாற்றுச் சாதனையாக இன்று வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget