மேலும் அறிய

“உங்கள் தீர்ப்பின் மூலம் மக்கள் கவனித்து வருகின்றனர்” - நீதித்துறையை மீண்டும் உரசிய மத்திய அமைச்சர்.!

நீதிபதிகள் தேர்தல்களை போட்டியிட வேண்டியதில்லை அல்லது அவர்கள் விசாரணையை எதிர்கொள்வதில்லை என மத்திய அமைச்சர் ரிஜிஜு விமர்சித்துள்ளார்.

ஜனநாயகத்தின் முக்கிய தூண்களாக இருப்பது நாடாளுமன்றமும் நீதிமன்றமும் ஆகும். ஆனால், இந்தியாவில் சமீப காலமாகவே, இந்த இரண்டு துறைகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது. 

இதற்கு காரணமாக இருப்பது கொலீஜியம் ஆகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.

ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.

ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதற்கு, நீதித்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீதிபதிகள் தேர்தல்களை போட்டியிட வேண்டியதில்லை அல்லது அவர்கள் விசாரணையை எதிர்கொள்வதில்லை என மத்திய அமைச்சர் ரிஜிஜு விமர்சித்துள்ளார். இருப்பினும், அவர்களின் செயல்பாடுகள் மற்றும் தீர்ப்புகளின் மூலம் பொது மக்கள் அவர்களை பார்த்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மக்கள் உங்களைப் பார்த்து மதிப்பிட்டு வருகின்றனர். உங்கள் தீர்ப்புகள், உங்கள் செயல்பாடுகள் வழியாக நீங்கள் எப்படி நீதி வழங்குகிறீர்கள் என்பதை கவனித்து வருகின்றனர். உங்களை பற்றிய கருத்துக்களை அவர்கள் உருவாக்கி கொள்கிறார்கள்.

1947 முதல் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே தற்போதுள்ள அமைப்பு தொடரும் என்று நினைப்பது தவறானது. அது ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது. மாறிவரும் சூழ்நிலையே தேவையை தீர்மானிக்கிறது. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டம் நூறு முறைக்கு மேல் திருத்தப்பட வேண்டியிருந்தது" என்றார்.

மூத்த அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் குடியரசு துணை தலைவர்கள் உள்ளிட்டோர், கொலீஜியம் அமைப்பின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

கடந்த 1993ஆம் ஆண்டு முதல் கொலீஜியம் அமைப்பு செயல்பாட்டில் உள்ளது. கொலீஜியம் அமைப்பிற்கு எதிராக மத்திய அரசு அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், அதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தொடர் கருத்துகளை தெரிவித்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
ABP Premium

வீடியோ

Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
Holiday Special Bus: 2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Maha Shivaratri 2026: மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
Embed widget