மேலும் அறிய

Covid JN.1 Variant: "அலர்ட்டா இருங்க” - திடீரென எகிறிய கொரோனா வைரஸ் - மாநிலங்களுக்கு மத்திய அரசு பரபர கடிதம்!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து, கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது. சமீப காலமாகத்தான், கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது.

மீண்டும் அலற வைக்கும் கொரோனா:

இச்சூழலில், கடந்த சில வாரங்களாகவே கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதனால், அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, கேரளாவில் JN.1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், இந்த வகை கொரோனா பரவிய நிலையில், தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 335 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது. அதேபோல, ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,701 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் 5 பேர்  உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மட்டும் நான்கு  பேர் உயிரிழந்துள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். எனவே, கொரோனாவால் இதுவரை 5,33,316 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு என்பது 4.50 கோடியாக உயர்ந்துள்ளது. 

மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்:

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும்  நிலையில்,  கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அக்கடிதத்தில், ”மரபணு மாற்றம் அடைந்த JN.1 புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால், மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி கொரோனா மாதிரிகளை சேரிக்க வேண்டும்.

கொரோனா பாதித்தவர்களுக்கு மரபணு சோதனை தேவைப்பட்டால் அது சார்ந்த ஆய்வகங்களுக்கு உடனடியாக மாதிரிகள் அனுப்பப்பட வேண்டும்.  பிசிஆர் மற்றும் ஆர்டிபிசி ஆர் பரிசோதனைகளை  அதிகளவில் எடுக்க வேண்டும்.  மாநிலங்கள் தங்களது மாவட்ட வாரியான கோவிட் பாதிப்பை கண்காணித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்படுகிறது. பண்டிகை காலங்கள் வர உள்ளதால், கோவிட்  வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அறிகுறிகள்:

காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், தலைவலி, சளி, தும்பல், சுவாச பிரச்னை ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான முதல் சுவா பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க

TN Rain News LIVE: வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை பொது விடுமுறை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget