மேலும் அறிய

ஐஐடி...ஐஐஎம்...மத்திய கல்வி நிறுவனங்களில் இத்தனை காலி பணியிடங்களா..? மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

இந்தத் தகவலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பகிர்ந்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள் மற்றும் ஐஐஎம்களில் 11,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பகிர்ந்துள்ளார். 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில், பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் என மொத்தம் 6,180 பணியிடங்கள், 18,956 அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதேபோல், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) 11,170 பணியிடங்களில் மொத்தம் 4,502 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்திய மேலாண்மை நிறுவனங்களில் (ஐஐஎம்), 1,566 ஆசிரியர் பணியிடங்களில் 493 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்து விரிவாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "காலிப்பணியிடங்கள் ஏற்படுவதும் அவற்றை நிரப்புவதும் ஒரு தொடர்ச்சியான செயலாகும். மத்திய பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அமைப்புகளாகும். அவை அந்தந்த மத்திய சட்டங்களின் கீழ் நிறுவப்பட்டுள்ளன. 

பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகள், வழிகாட்டுகளுக்கு ஏற்ப மத்திய கல்வி நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு முறையை அமைப்புகள் வடிவமைத்துள்ளது.

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் (HEIs) பணியிடங்களை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிரப்ப உத்தரவிட்டுள்ளேன். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பணியிடங்களை நிரப்ப கடிதம் எழுதியதுடன், மாதாந்திர கண்காணிப்பு பொறிமுறையை அமைச்சகம் அமைத்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐஎம்களில் காலியாக உள்ள பணியிடங்களில் எஸ்சி பிரிவினருக்கு 961 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 578 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 1,657 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 643 பணி இடங்களும் மாற்று திறனாளிகளுக்கு 301 பணி இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜூலை 9ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு, மத்திய கல்வி நிறுவனங்களின் (ஆசிரியர் பணியிடத்தில் இடஒதுக்கீடு) சட்டம், 2019, அரசிதழில் வெளியடப்பட்டது. இதன் கீழ் பல்கலைக்கழகத்தை ஒரு அலகாகக் கருதி இட ஒதுக்கீடு பட்டியல்களைத் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், சட்டத்தின்படி, அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில விதிவிலக்குகள் தவிர அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பொருந்தும். 

இச்சட்டத்தின்படி, மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களில் நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் அனைத்து பணியிடங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, எந்த இடஒதுக்கீடு பணியிடத்தை இட ஒதுக்கீடு இன்றி நிரப்பப்படாது" என்றார்.

நாட்டில் மொத்தம் 23 ஐஐடிகளும் 20 ஐஐஎம்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! சோகத்தில் திமுகவினர்
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
Vinayagar Chaturthi 2025 Date: பிள்ளையாரப்பா.. விநாயகர் சதுர்த்தி எப்போது? தேதியை குறிச்சுக்கோங்க!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
ICAI CA Admit Card: சிஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
கணவர் மறைவுக்குப் பின் அதிர்ச்சி! ₹98 லட்சம் பெற போராடிய மனைவி - நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு
கணவர் மறைவுக்குப் பின் அதிர்ச்சி! ₹98 லட்சம் பெற போராடிய மனைவி - நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு
யுபிஎஸ்சி அறிவிப்பு: EPFO-ல் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!
யுபிஎஸ்சி அறிவிப்பு: EPFO-ல் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
தூத்துக்குடியில் சிப்காட்: 17,200 வேலைவாய்ப்புகள்! விவசாயிகளின் ஆதரவு கிடைக்குமா? புதிய தொழில் பூங்கா திட்டம்!
தூத்துக்குடியில் சிப்காட்: 17,200 வேலைவாய்ப்புகள்! விவசாயிகளின் ஆதரவு கிடைக்குமா? புதிய தொழில் பூங்கா திட்டம்!
Embed widget