மேலும் அறிய
Advertisement
ABP-யின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் - தலைமை ஆசிரியரின் உத்தரவாதம்
சாதாரண மக்களுக்காக பணியாற்றும் நிறுவனமாக ABP-ஊடக குழுமம் இருக்குமே தவிர, ஆள்வோருக்குப் பணியாற்றும் நிறுவனமாக ஒரு போதும் இருக்காது என ABP ஊடக குழுமத்தின் தலைமை ஆசிரியர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
சாதாரண மக்களுக்காக பணியாற்றும் நிறுவனமாக ABP-ஊடக குழுமம் இருக்குமே தவிர, ஆள்வோருக்குப் பணியாற்றும் நிறுவனமாக ஒரு போதும் இருக்காது என ABP ஊடக குழுமத்தின் தலைமை ஆசிரியர் அதிதேப் சர்க்கார் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டு விழாவில் ABP:
- இந்தியாவின் மிகப் பெரும் ஊடக நிறுவனமான ABP குழுமத்தின் முதல் குழந்தையான, ஆனந்த பஜார் பத்திரிகாவின் 100-வது ஆண்டு விழா, ஊழியர்கள் மற்றும் வாசகர்களுடன் சீறும்சிறப்புமாக கொல்கத்தாவில் நடைபெற்றது.
- இந்தியாவின் சர்வதேச பெருமைகளிலும் அடையாளங்களிலும் ஒன்றான நோபல் பரிசுக்கு கௌரவம் சேர்த்த கவிஞர் ரபீந்திரநாத் தாகூர் வரைந்த ஓவியத்தை பின்புலமாக வைத்து, நிகழ்ச்சியின் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
- பிரசித்திப் பெற்ற கொல்கத்தாவின் பிஸ்வா பங்களா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக, நோபல்பரிசு பெற்ற இந்திய பொருளாதார மேதை, பேராசிரியர் அமர்த்தியா சென், காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.
தலைமை ஆசிரியரின் உத்தரவாதம்:
- 100 ஆண்டுகளுக்கு முன்னர் மாலை நாளிதழாகத் தொடங்கப்பட்ட இந்த நாளிதழ், முதல் நாளிலேயே சிவப்பு மையால் முழுமையாக அச்சிடப்பட்டு, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக, மக்கள் குரலாக எதிரொலிக்கப் போகிறது என்பதை எடுத்துக் காட்டியது என ABP குழுமத்தின் தலைமை ஆசிரியர் அதிதேப் சர்க்கார் குறிப்பிட்டார்.
- நூறாண்டுகளாக மக்களின் குரலாக எதிரொலித்து வரும் ஆனந்த பஜார் பத்திரிகா நாளிதழ், தற்போது பல பத்திரிகைகள் தொலைக்காட்சிகள், டிஜிட்டல் தளங்கள் என பல ரூபங்களில் மக்களின் செல்வாக்கோடு பெரும் ஊடகக் குழுமமாக வளர்ந்துள்ளது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
- மகாத்மா காந்தி, தாகூர் உள்ளிட்ட பல்வேறு இந்தியாவின் அடையாளங்களையும் ABP கடந்து வந்த சோதனை, வளர்ச்சி என நூறாண்டு பயணத்தையும் தமது உரையின் போது, தலைமை ஆசிரியர் அதிதேப் சர்க்கார் குறிப்பிட்டார்.
- சுதந்திரத்தின் போதும், அதற்குப்பின்னும் தொடர்ந்து மக்களின் குரலாக ABP ஒலிக்குமே தவிர, ஆள்வோரின் குரலாக இருக்காது என்பதை உறுதிப்படத் தெரிவித்த குழும தலைமை ஆசிரியர் அதிதேப் சர்க்கார், காலத்தின் வளர்ச்சிக்கேற்ப டிஜிட்டல் தளத்திலும் எட்டு மொழிகளில் ABP குழமம் தற்போது மக்களைச் சென்றடைவதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
- யாருக்கும் அஞ்சாத, சார்பற்ற, உறுதியான, தைரியமான முறையில் மக்கள் நலன் சார்ந்த தம்முடைய பணியை ABP குழுமம் தொடர்ந்து ஆற்றும் என்று உத்தரவாதம் தரும் வகையில் நுற்றாண்டு விழா பேருரையை நிறைவு செய்தார் ABP குழும தலைமை ஆசிரியர் அதிதேப் சர்க்கார்.
நோபல் பரிசாளர் அமர்த்தியா சென்னின் பாராட்டும் பெருமிதமும்:
- காணொலி காட்சியின் மூலம், உலகப்புகழ் பேராசிரியர் அமர்த்தியா சென் ஆற்றிய சிறப்புரையின் போது, பெங்கால் மற்றும் இந்தியர்களின் வாழ்வியலில், ஆனந்தபஜார் பத்திரிகா நாளிதழ் ஆற்றிய பங்கினை நினைவுக் கூர்ந்தார்.
- சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் என எப்போதும் தைரியமான நேர்மறையான பங்கினை ஆனந்த பஜார் பத்திரிகா நாளிதழ் ஆற்றி வருவதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட பேராசிரியர் அமர்த்தியா சென், அந்த நாளிதழின் ஆசியர்களுடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் நிகழ்ச்சியின் போது பகிர்ந்தார்.
- மேலும், ஆழ்ந்த சிந்தனைகள் தேவைப்படும் நேரங்களின் போதெல்லாம், நம்பிக்கை தரக்கூடிய நேர்மறையான பங்களிப்பை ABP தொடர்ந்து செய்து வருகிறது என பேராசிரியர் அமர்த்தியா சென் பாராட்டு தெரிவித்தார்.
கடமை வீரர்களுக்கு கௌரவம்:
- நூற்றாண்டு விழாவில், ஆனந்த பஜார் பத்திரிகா நாளிதழின் வளர்ச்சியில் பங்காற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, மிக முக்கிய பங்காற்றிய ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், மேற்கு வங்கத்தின் பல்துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion