சிபிஎஸ்இ ஃபெயில் விவகாரம்; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன சொன்னார் தெரியுமா?
சிபிஎஸ்இ மாணவிகள் ஃபெயில் செய்யப்படும் விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சமத்துவத்தை கொண்டு வாருங்கள்:
தமிழ்நாட்டில் சமத்துவத்தை கொண்டு வாருங்கள். சென்சஸ் வரும் எப்படி என்றாலும், அதில் இருந்து புள்ளி விவரங்கள் வரும். நாங்கள் போராடியதால்தான் கிடைக்கிறது என்று சொல்ல வேண்டாம். இன்றும் தமிழ்நாட்டில் நான் போகும்போது சாதிபெயருடன் பெயர் இருப்பதை தமிழ்நாட்டில் இருக்கிறது.
நாங்கள் நன்றாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். வடக்கில் சில மாநிலங்களைப் பாருங்கள் என்று சொல்கிறார்களே. அந்த மாநிலங்களில் கூட மனித கழிவுகளை தண்ணீரில் சேர்க்கவில்லை. இந்த விஷயத்தில் அரசியல் ரீதியாக பார்க்காமல் இதில் இருந்து நாம் வரக்கூடிய தரவுகளை வைத்துக்கொண்டு பின்தங்கியிருப்பவர்களுக்கு எப்படி இன்னும் வாய்ப்புகள் கொடுக்க முடியும் என்று யோசிக்க வேண்டும். நாங்கள் வென்றோம், நீங்கள் தோற்றோம் என்ற பேச்சை விட்ரனும்.
அறிவுத்திறன்:
எனக்கு இங்க இருக்கக்கூடிய ஆளுங்கட்சி உறுப்பினர்கிட்ட இருந்து எனக்கு நன்றினு தனிப்பட்ட முறையில் செய்தி வருது. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ஒதுக்குனதுக்கு நன்றினு செய்தி வருது. தனிப்பட்ட முறையில் செய்தி. பொதுவெளியில் இப்படி.
பாஸ் ஆனால்தான் குழந்தைகளுக்கு எதிர்காலம்னு எல்லாரையும் பாஸ் பண்ண வைத்துவிட்டு, இன்னும் ஒரு வருஷம் படித்தால்தான் நல்ல அறிவு வரும்னு யோசிக்காம அறிவுத்திறன் முன்னேறும்னு இல்ல. இதை படிப்பின் தரத்தை பற்றி யோசிக்கனும். ஒவ்வொரு மாநிலமும் யோசிக்கனும். படிப்பின் தரம் குறைய குறைய ஏன் நாங்க ஐஐடி-யில் தயார் ஆகவில்லை என்று கேட்குறாங்க.
இந்த விஷயத்தை நிபுணர்களுடன் உட்கார்ந்து பேசனும். எந்தவொரு செயல்பாட்டிற்கும் இங்க ஒரு தீர்மானம் வந்துடும். இதை ஒத்துக்கமாட்டோம். இது தமிழர்களின் மனநிலைனு சொல்லுவாங்க.
இவ்வாறு அவர் கூறினார்.





















