பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடலாமா? ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன மத்திய அரசு..
பத்திண்டாவை சேர்ந்த சமூக ஆர்வலரான ஹர்மிலாப் கிரேவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் இக்கேள்விகளை எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள், அணிகளை ஆதரிக்கலாமா? இந்திய எல்லைக்குள் வெளிநாட்டு கொடிகளை ஏந்த உரிமை உள்ளதா?. இதுபோன்ற பல விவகாரங்களுக்கு தங்களிடம் பதில் இல்லை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பத்திண்டாவை சேர்ந்த சமூக ஆர்வலரான ஹர்மிலாப் கிரேவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் இக்கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
வேறோர் நாட்டின் கொடிகளை ஏற்றுவது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், "இதுபோன்ற விவகாரங்களில் கையொப்பமிட்ட தலைமை பொது தகவல் அதிகாரியிடம் தகவல் கிடைக்கவில்லை. தேவையான தகவல்கள் வெளிவிவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் கிடைக்கலாம்.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
எனவே, உங்களுக்குத் தேவையான தகவல்களை நேரடியாக வழங்குவதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் பிரிவு 6(3)ன் கீழ், உங்கள் விண்ணப்பம், பரத் குமார் குத்தாட்டி, இயக்குநர் மத்திய பொது தகவல் அதிகாரிகள், ஆர்டிஐ பிரிவு, வெளிவிவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படுகிறது" என பதில் அளித்துள்ளது.
முன்னதாக, எதிர் அணிகளின் வெற்றியை கொண்டாடியதற்கு குறிப்பாக பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். எந்தெந்த அணிகளின் வெற்றியை எல்லாம் கொண்டாடக் கூடாது என கேட்கப்பட்ட கேள்வியும் வேறு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், "கீழே கையொப்பமிட்ட மத்திய தகவல் அதிகாரியிடம் தகவல் கிடைக்கவில்லை. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் தேவையான தகவல்கள் கிடைக்கலாம்.
எனவே, உங்களுக்குத் தேவையான தகவல்களை நேரடியாக வழங்குவதற்காக, ஆர்டிஐ சட்டம், 2005ன் பிரிவு 6(3)ன் கீழ், உங்கள் விண்ணப்பம் நீலம் அரோரா, துணைச் செயலாளர் & மத்திய தகவல் அதிகாரி, ஆர்டிஐ பிரிவு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு மாற்றப்படுகிறது" என பதில் அளித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

