Solar Eclipse: சூரிய கிரகணத்தில் வாகனங்களை எப்படி ஓட்ட வேண்டும்? கவனிக்க வேண்டியவை என்ன?
Solar Eclipse: சூரிய கிரகணத்தின் போது வாகனம் ஓட்டலாமா என்பன போன்ற ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Solar Eclipse: இன்றைய சூரிய கிரகணத்தின் போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம்:
நடப்பு ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி தோன்றியது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கும். இதன் உச்சம் நள்ளிரவு 12 மணியளவில் நிகழும். அதிகாலை 1.25 மிணிக்கு சூரிய கிரகணம் முடிவடைகிறது. இதன் காரணமாக இந்த அறிய வானியல் நிகழ்வை இந்தியாவில் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இந்த கிரகணம் தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், வட துருவம், தென் துருவம் ஆகிய பகுதிகளில் தெரியும்.
கிரகணத்தின் போது வாகனம் ஓட்டலாமா?
இதனிடையே, சூரிய கிரகணத்தை சார்ந்து, பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. அந்த வகையில் கிரகணத்தின் போது, வாகனம் ஓட்டலாமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. ஆனால், சூரிய கிரகணத்தின் போது வாகனம் ஓட்டுவது இயல்பாகவே ஆபத்தானது அல்ல என்பதே வல்லுநர்களின் கருத்து. இருப்பினும், பல்வேறு காரணங்களால் நாம் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம். அரிய நிகழ்வ காணும் ஆவலில் வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்படலாம் என்பதால், கூடுதல் கவனத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டும்.
விபத்துகளை தவிர்ப்பது எப்படி?
- மற்ற கார்களை மிக நெருக்கமாகப் பின்தொடர்வத தவிர்க்க வேண்டும்.
- வாகனத்தின் கண்ணாடிகளைப் பயன்படுத்தி தற்காப்புக் கவனத்துடன் வாகனம் ஓட்ட வேண்டும்.
- கிரகணத்தின் போது சூரியனை நேரடியாக பார்த்தவாறு வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்
- வாகனத்தை ஓட்டும்போது சூரிய கிரகணத்தை ரசிக்கவோ, புகைப்படம் எடுக்கவே முயற்சிக்காதீர்கள்
- உங்கள் வாகன முகப்பு விளக்குகளை ஒளிர வைத்தவாறு வாகனத்தை செலுத்துங்கள்
- சூரிய ஒளிய தடுக்க சன் விசரை கீழே வைக்கவும்.
- வாகனம் ஓட்டும் போது கிரகண கண்ணாடி அணிய வேண்டாம்
- கிரகணத்தைக் காண சாலை, நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
பூமி மற்றும் சூரியன் இடையே நிலவு வரும் போது, அது சூரிய வெளிச்சம் பூமியின் மீது விழாமல் தடுக்கிறது. அப்படி நிகழும் போது சூரிய கிரகணம் தோன்றும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக தோன்றும். நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்பது நிலவு சூரியனின் பெரும்பாலான பகுதி மறைத்து நிலவின் விளிம்பில் சூரிய ஒளி வளையம் போன்று தோன்றும். அந்த சமயத்தில் பூமியின் சில பகுதிகளில் வளைய வடிவில் நிழல் தோன்றும். ஹைப்ரிட் சூரிய கிரகணம் என்பது பகுதி, முழு மற்றும் வளைய சூரிய கிரகணத்தின் கலவையாகும்.