4ஆவது தொழில் புரட்சி.. BSNL உடன் கைகோர்க்கும் NRL!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL - பிஎஸ்என்எல்) மற்றும் நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனம் (NRL - என்ஆர்எல்) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தையும் தொழில்துறை நவீனமயமாக்கலையும் விரைவுபடுத்துவதற்கான ஒரு முயற்சியாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL - பிஎஸ்என்எல்) மற்றும் நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனம் (NRL - என்ஆர்எல்) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
4ஆவது தொழில் புரட்சி:
அஸ்ஸாம் குவஹாத்தியில் நிதி அமைச்சகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கான 4-வது தொழில் புரட்சி தொடர்பான பயிலரங்கின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தப் பயிலரங்கில் நிதி அமைச்சகம் மற்றும் பல்வேறு மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர். புதுமை, செயல்திறன் தற்சார்பு ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் 4-வது தொழில் புரட்சிக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களை (CPSE) மேம்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
BSNL உடன் கைகோர்க்கும் NRL:
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பிஎஸ்என்எல் மற்றும் என்ஆர்எல் ஆகியவை இந்தியாவின் முதல் 5ஜி சிஎன்பின் (கேப்டிவ் நான்-பப்ளிக் நெட்வொர்க்)-ஐ சுத்திகரிப்புத் துறையில் பயன்படுத்த ஒத்துழைக்கும். இது, பாதுகாப்பான, மிகவும் நம்பகமான தொழில்துறை இணைப்பின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும்.
புதிய சகாப்தம்:
5ஜி சிஎன்பிஎன், ஒருங்கிணைப்பு செயல்பாட்டுத் திறனை மற்றும் சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஏஆர்/விஆர்- அடிப்படையிலான பயிற்சி, டிஜிட்டல் ட்வின்ஸ் மற்றும் நிகழ்நேர ஐஓடி பயன்பாடுகள் போன்ற மாற்றத்தக்க தொழில்நுட்பங்களையும் செயல்படுத்தும் என்று என்ஆர்எல் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் கூறினார். இந்தியாவின் சுத்திகரிப்புத் துறைக்கு இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம் என்று அவர் தெரிவித்தார்.
BSNL and NRL ink landmark MoU to deploy India’s first 5G captive non-public network in refinery sector
— DD India (@DDIndialive) August 3, 2025
In a move to accelerate India’s digital transformation and industrial modernization, Bharat Sanchar Nigam Limited (@BSNLCorporate) and Numaligarh Refinery Limited (NRL) signed… pic.twitter.com/NBl1QpmNff
"இந்தியாவின் உத்திசார் துறைகளை அடுத்த தலைமுறை டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் மேம்படுத்துவதில் பிஎஸ்என்எல்-ன் உறுதிப்பாட்டை இந்த ஒத்துழைப்பு எடுத்துக்காட்டுகிறது என்று பிஎஸ்என்எல்-ன் தலைவர் ஏ. ராபர்ட் ஜே ரவி குறிப்பிட்டார்.




















