Breaking LIVE : இராஜ ராஜ சோழன் பிறந்தநாள்- இனி அரசு விழாவாக கொண்டாட தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
![Breaking LIVE : இராஜ ராஜ சோழன் பிறந்தநாள்- இனி அரசு விழாவாக கொண்டாட தமிழ்நாடு அரசு அறிவிப்பு! Breaking LIVE : இராஜ ராஜ சோழன் பிறந்தநாள்- இனி அரசு விழாவாக கொண்டாட தமிழ்நாடு அரசு அறிவிப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/e0be97f144efc3277c3965b79d4adf451667356775442102_original.jpg)
Background
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மழை கொடடித் தீர்த்து வருகிறது.
அதேபோல, வேலூர் மாவட்டத்திலும் மழை நீடித்து வருவதால் அந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்ததால் சென்னை மாநகரம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இதுவரை வடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதன் காரணமாக, சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
Breaking LIVE : இராஜ ராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக அனுசரிக்கப்படும்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சோழ மன்னர் இராஜ ராஜ சோழனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக அனுசரிக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Breaking LIVE : சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்!
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Breaking LIVE : 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 3 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மூன்று பேரை அந்த நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காட்டில் அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு
திருவேற்காட்டில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)