Breaking LIVE:கோவை ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு, இந்தியா,உலகம்,விளையாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனுக்குடன் தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை. கலால் விலை குறைக்கப்பட்ட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 9வது நாளாக விலை மாற்றமின்றின்றி விற்கப்படுகிறது. அதன்படி,இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, பரபரவென ஏறிய பெட்ரோல் விலை ரூ.110 தாண்டி சென்றுகொண்டிருந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறியது. சாமனியர்களை பெருமளவில் பாதிக்கும் பெட்ரோல் டீசல்விலையை குறைக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன்காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது.
கலால் வரி குறைப்பு
முன்னதாக, இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பெட்ரோல் விலை ரூபாய்க்கும் 8-ம், டீசல் விலை ரூபாய்க்கும் 6-ம் கலால் வரியை குறைத்துள்ளதாக அறிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக ஏறி வந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அவதியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பெட்ரோல் மீதான வரியை ரூபாய் 3 குறைத்து பெட்ரோல் விலையை ரூபாய் 100க்கு கீழ் கொண்டு வந்தது. ஆனாலும், மீண்டும் விலை ஏறியதன் விளைவாக சென்னையில் கடந்த 40 நாட்களாக பெட்ரோல் விலை ரூபாய் 110க்கு விற்பனையாகி வந்தது
விலை குறைக்கப்படுமா?
இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்ததால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். இந்த விலை குறைப்பு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். பெட்ரோல் விலை ஏற்றத்தால் பால், டீ உள்ளிட்ட சில பொருட்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையை குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
கோவை ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் உழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆவினில் பணியாற்றும் 20 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய, உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் கைது
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை ஹவாலா பண மோசடி புகாரில் சற்றுமுன் கைது செய்துள்ளது.
12ம் வகுப்பு வேதியியல் தேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படுகிறது
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே பீமனோடை வடிகால் வாய்க்காலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சுமார் 4.5 கி.மீ தூரத்திற்கு நடைபெற்று வரும் தூர்வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய அரசியல் 8 ஆண்டுகளில் மாறியுள்ளது - ஜெ.பி. நட்டா
இந்திய அரசியல் கலாசாரம் 8 ஆண்டுகளில் மாறியுள்ளது. சேவை, நல்லாட்சி, ஏழை, நலன் இதுவே அரசின் செயல்பாடு. மோடி அரசின் ஆன்மா -
ஜெ.பி. நட்டா
பிரதமர் மோடி இருக்கிறார். எதுவும் நடத்தி முடிக்கப்படும் என்ற நேர்மறையான நிலை உருவாகியுள்ளது. - ஜெ.பி. நட்டா